மணமேல்குடி ஒன்றியத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!


ஜன.01,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் மஜக வின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.

இம்முகாமை மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன் துவக்கி வைத்திட திரளானோர் தங்களை மஜக உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

புதிய உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக மஜக அட்டைகளை மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி கையளித்தார்.

இதில் MJTS மாவட்ட துணை தலைவர் அஜ்மீர் கான், மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலை வகிக்க, மீனவரணி மாவட்ட செயலாளர் ஷாஜஹான், கோட்டைப்பட்டினம் கிளை செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் ஜூபைர் கான், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய செயலாளர் தாஜ்தீன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, சதாம் உசேன் @ மன்னார் உள்ளிட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.