ஜன.10, இன்று திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் பெருந்திரளான எண்ணிக்கையில் இளைஞர்களும், மாணவர்களும் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து கட்சி முழக்கங்கள் அதிர பொதுச் செயலாளர் அவர்கள் கொடியேற்றி, அலுவலகத்தையும் திறந்து வைத்தார். அப்போது அத்திக்கடையில் எங்களுக்கு கிடைத்த அத்திப்பழங்கள் என புதியவர்களை வரவேற்று பேசினார். அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பிறகு ஜமாத் அழைப்பை ஏற்று அவர்களது அலுவலகத்திற்கு சென்று உரையாடினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி, மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் லியாக்கத் அலி, கிளை செயலாளர் பைசல் உள்ளிட்ட திரளானோர் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.
Month:
இளைஞர்களை ஈர்க்கும் மஜக !
திருவண்ணாமலை.ஜனவரி.09., மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரத்தை சேர்ந்த இளைஞர்கள் மாவட்டச் செயலாளர் காஜா ஷரிப் முன்னிலையில் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். பின்னர் மாவட்டச் செயலாளர் அவர்கள் மஜகவில் புதியதாக இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கைளை விளக்கி பேசினார். இந்நிகழ்வுக்கு நகர செயலாளர் பாபுலால் தலைமை தாங்கினார், மேலும் நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #திருவண்ணாமலை_மாவட்டம். 10.01.2021
மத்திய சென்னை மேற்கு மஜக நிகழ்ச்சிகள்.!
சென்னை.ஜனவரி.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் பகுதி சார்பில் கொடியேற்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோர் 3 இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றினார்கள். அதை தொடர்ந்து பொதுச் செயலாளர் அவர்கள் கட்சியின் கட்சியின் பலகையை திறந்து வைத்து, உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் கடாபி, மாவட்ட பொருளாளர் அன்வர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் பக்கீர் மொய்தீன், பகுதி செயலாளர் யாசீன், பகுதி பொருளாளர் குத்துபுதீன் சாதிக் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம் 09-01-2021
முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழர் இன படுகொலைகள் துயரம் நிறைந்தவை. அதன் கண்ணீர் நினைவுகளை தமிழ் உலகம் ஆங்காங்கே ஆவணப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்று பேரழிவை நினைவூட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. அது போல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணும் அந்த துயரத்தை கூறிக் கொண்டிருந்தது. நேற்று இரவோடு இரவாக இலங்கை அரசு அதை இடித்து சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த நினைவு தூணை மீண்டும் அதே இடத்தில் எழுப்பிடுவதே நியாயமான நடவடிக்கையாக இருக்கும். இவ்விஷயத்தில் இலங்கை அரசு பேரினவாத உணர்வோடு அணுகாமல், சிறுபான்மை தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 09.01.2021
மத்திய சென்னை மஜக ஏற்பாடு.! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்.!
சென்னை.ஜன.08., மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திரளானோர் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநிலச் செயலாளர் ஜே.சீனி முகமது ஆகியோர் உடன் இருந்தனர். அவர்களுடன் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் மைதீன் உள்ளிட்ட மஜக-வினர் உடன் வந்திருந்தனர். மஜகவில் இணைந்த பிறகு அதன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சிறப்பாக எல்லோரையும் அரவணைத்து செயல்பட வேண்டுமென அனைவருக்கும் பொதுச்செயலாளர் அறிவுரை வழங்கினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #MJK2021 #மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம் 08-01-2021