அத்திக்கடையில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்! அத்திக்கடையில் கிடைத்த அத்திப்பழங்கள் என பொதுச்செயலாளர் பேச்சு..!


ஜன.10,

இன்று திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் பெருந்திரளான எண்ணிக்கையில் இளைஞர்களும், மாணவர்களும் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., முன்னிலையில் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து கட்சி முழக்கங்கள் அதிர பொதுச் செயலாளர் அவர்கள் கொடியேற்றி, அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

அப்போது அத்திக்கடையில் எங்களுக்கு கிடைத்த அத்திப்பழங்கள் என புதியவர்களை வரவேற்று பேசினார்.

அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

பிறகு ஜமாத் அழைப்பை ஏற்று அவர்களது அலுவலகத்திற்கு சென்று உரையாடினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணைச் செயலாளர் நத்தர் கனி, மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் லியாக்கத் அலி, கிளை செயலாளர் பைசல் உள்ளிட்ட திரளானோர் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.

Top