தூத்துக்குடி.ஜன.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், மானங்காத்தான் கிளை சார்பாக இன்று பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திரவியம் எழும்பு முறிவு மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார், மேலும் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய், மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது, பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக் ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னதாக கயத்தார் பேருந்து நிலையம் அருகில் கட்சி கொடியை பொருளாளர் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் P.முகமது தாரிக், U.சதாம் உசேன், கிளை பொருளாளர் முகமது ரிபாயில், கிளை மற்றும் மானங்காத்தான், அய்யனார் ஊத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம் 25-01-2021
Month:
பணிகளில் பாராட்டு சான்றிதழ்களை குவித்த மாவட்டங்கள்! மஜக 9 ஆவது தலைமை செயற்குழு துளிகள்!
ஜனவரி 23 அன்று திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது. நெல்லையின் முக்கிய வீதிகளில் மஜக கொடிகள் அணிவகுத்து பறந்துக் கொண்டிருந்தது. எங்கும் சுவரொட்டிகள், பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. காலை 10 மணி முதலே மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மண்டபத்தில் வரிசையாக நின்று அழைப்பிதழ்களை பதிவு செய்து பேட்ஜ்களை பெற்றுக் கொண்டனர். கோவையில் பிப்ரவரி 29 அன்று மஜக வின் வாழ்வுரிமை மாநாடு நடந்து முடிந்த சில நாட்களில் கொரோனா தொற்று நோய் பரவியதால் ஏறத்தாழ 10 மாதங்கள் மாநில அளவிளான ஒன்று கூடல்கள் இல்லாமல் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாத சூழல் இருந்தது. அந்த இடைவேளைக்கு பிறகு தலைமை செயற்குழு நடப்பதால் எல்லோரும் உற்சாகமாக சந்தித்து மகிழ்ந்தனர். மண்டபத்தில் மஜக கொடி, மப்ளர், தொப்பி, டி ஷர்ட், வேஷ்டி ஆகியன மலிவு விலை விற்பனையில் இருந்ததால் அந்த இடத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 10 மணிக்கு கூடிய சிறப்பு நிர்வாக குழு முடிந்ததும் தலைமை நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வர, காலை 11 மணிக்கு
இந்திய குடியரசு தினத்தை இரத்ததானம் செய்து கொண்டாடிய குவைத் மஜகவினர்!
குவைத். ஜன.24, மனிதநேய ஜனநாயக கட்சியின் வளைகுடா பிரிவான குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக 72ம் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நான்காம் ஆண்டு இரத்ததான முகாம் ஜாப்ரியா மத்திய இரத்த வங்கியில் 22/01/2021 வெள்ளிக்கிழமை அன்று மண்டல செயலாளர் நீடூர் முகம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது துவக்கமாக இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மண்டல துணை செயலாளர் இலங்கை மன்சூர் அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதலே பல்வேறு தமிழ் சார்ந்த அரசியல் கட்சி, இஸ்லாமிய சங்கங்கள், பொது நல அமைப்பு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள் என பல்வேறு இயக்கத்தினரின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாது ஜாதி மதம் பேதமின்றி குருதி கொடை வழங்கி மனிதநேயத்தை பறை சாற்றினர். குருதி கொடை வழங்கிய அனைவருக்கும் நாகை சட்டமன்ற உறுப்பினரும் மஜக பொதுசெயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MA, MLA., அவர்கள் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் குவைத் மண்டல MKP சார்பாக வழங்கப்பட்டது. குருதி கொடை அளிப்பவர்களை
2021 சட்டசபை தேர்தல் முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கியது மஜக தலைமை செயற்குழு…!
ஜனவரி 23, மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-வது தலைமை செயற்குழு கூட்டம் நெல்லையில் உள்ள ஹோட்டல் அஃப்னா ஹாலில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நடைப்பெற்றது. இதில் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு பாரூக், இராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாபிதீன், தைமிய்யா, மன்னை. செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது ஆகியோர் பங்கேற்றனர். மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அணீஸ், ஷமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், பாபு ஷாகின்ஷா, நெய்வேலி இப்ராகிம், துரை முகம்மது, அப்சர் செய்யது, காயல் சாகுல் மற்றும் அணிகளின் மாநில செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. தேர்தல் நிலைபாடு: எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் எத்தகைய அரசியல் நிலைபாடுகள் எடுப்பது என்பது குறித்து இச்செயற்குழுவில் விரிவாக கருத்து கேட்கப்பட்டது. அறுதிப் பெரும்பான்மையானவர்களின் கருத்துப்படி, இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைமை நிர்வாகக் குழுவுக்கு இச்செயற்குழு வழங்குவதாக தீர்மானிக்கப்படுகிறது. 2. தேர்தல் மாதங்கள்: வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, வருகின்ற பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களை மஜகவின் தேர்தல்
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வருடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!
ஜன.23., கோவை வருகை தந்த தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை AK.சுல்தான் அமீர், அவர்கள் சந்தித்தார். இச்சந்திப்பில் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான மனுவினை முதல்வரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் அளித்தார். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது தமிழக சிறைகளில் உள்ள 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத, பேதமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். உயர்நீதி மன்றத்தால் உத்தரவிடப்பட்ட 12 நபர்களை நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட வேண்டும். பரோலில் வரும் சிறைவாசிகளுக்கு வழி காவல் இல்லாத பரோல் வழங்கவேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் அளிக்கப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட தமிழக முதல்வர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இது தொடர்பாக ஏற்கனவே மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறைவாசிகள் குடும்பத்தாரை அழைத்து சென்று அமைச்சர் SP.வேலுமணி, அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், மற்றும் பகுதி, கிளை, நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கோவை_மாநகர்_மாவட்டம் 23.01.2021