மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்..! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது துவங்கி வைத்தார்..!!


தூத்துக்குடி.ஜன.25.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், மானங்காத்தான் கிளை சார்பாக இன்று பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திரவியம் எழும்பு முறிவு மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் கிளை செயலாளர் தமிம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார், மேலும் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய், மாநில துணை செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது, பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக கயத்தார் பேருந்து நிலையம் அருகில் கட்சி கொடியை பொருளாளர் ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் P.முகமது தாரிக், U.சதாம் உசேன், கிளை பொருளாளர் முகமது ரிபாயில், கிளை மற்றும் மானங்காத்தான், அய்யனார் ஊத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம்
25-01-2021