பணிகளில் பாராட்டு சான்றிதழ்களை குவித்த மாவட்டங்கள்! மஜக 9 ஆவது தலைமை செயற்குழு துளிகள்!


ஜனவரி 23 அன்று திருநெல்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது.

நெல்லையின் முக்கிய வீதிகளில் மஜக கொடிகள் அணிவகுத்து பறந்துக் கொண்டிருந்தது. எங்கும் சுவரொட்டிகள், பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

காலை 10 மணி முதலே மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மண்டபத்தில் வரிசையாக நின்று அழைப்பிதழ்களை பதிவு செய்து பேட்ஜ்களை பெற்றுக் கொண்டனர்.

கோவையில் பிப்ரவரி 29 அன்று மஜக வின் வாழ்வுரிமை மாநாடு நடந்து முடிந்த சில நாட்களில் கொரோனா தொற்று நோய் பரவியதால் ஏறத்தாழ 10 மாதங்கள் மாநில அளவிளான ஒன்று கூடல்கள் இல்லாமல் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாத சூழல் இருந்தது.

அந்த இடைவேளைக்கு பிறகு தலைமை செயற்குழு நடப்பதால் எல்லோரும் உற்சாகமாக சந்தித்து மகிழ்ந்தனர்.

மண்டபத்தில் மஜக கொடி, மப்ளர், தொப்பி, டி ஷர்ட், வேஷ்டி ஆகியன மலிவு விலை விற்பனையில் இருந்ததால் அந்த இடத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

காலை 10 மணிக்கு கூடிய சிறப்பு நிர்வாக குழு முடிந்ததும் தலைமை நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வர, காலை 11 மணிக்கு செயற்குழு தொடங்கியது.

மேடையில் முதல் வரிசையில் தலைமை நிர்வாகிகளும், இரண்டாம் வரிசையில் மாநில துணைச் செயலாளர்களும், மூன்றாம் வரிசையில் அணிகளின் மாநில செயலாளர்களும் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்தில் செயற்குழு உறுப்பினர்களால் அரங்கம் நிறைந்தது.

நிகழ்வின் தொடக்கமாக இணைப் பொதுச் செயலாளர் JS .ரிபாயி, அவர்கள் சிறப்பான அறிவுரைகள் நிரம்பிய உரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி அவர்கள் உற்சாகம் பொங்க அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து இந்த செயற்குழு எதற்காக? என்பதை அழகாக விளக்கி பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, அவர்கள் பேசினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய துணைப் பொதுச் செயலாளர் தைமியா அவர்கள் , தேர்தல் நிலைபாடுகள் குறித்து மாவட்டங்கள் சார்பில் கருத்து கூறலாம் என கூறி விட்டு, கருத்தாய்வை துணைப் பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக் அவர்களிடம் ஒப்படைத்தார்.

ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 3 அல்லது 4 நிமிடங்கள் வரை கருத்துகளை கூற வருமாறு அழைக்க, அனைத்து மாவட்டங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அனைவரின் கருத்தையும் இணைப் பொதுச் செயலாளர் JS .ரிபாயி அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்.

பெருவாரியான கருத்துகள் தலைமை நிர்வாக குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

பின்னர் அதுவே முதல் தீர்மானமாக தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஓராண்டுகளாக மாவட்டங்கள் ஆற்றிய சேவைகள், போராட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை தரவரிசைப்படுத்தி விருதுகள் வழங்கப்பட்டது.

தலைமை நிர்வாகிகள், மாநில துணை செயலாளர்கள், மாநில அணி செயலாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு துறையிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்டங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

பலத்த ஆரவாரம், கைத்தட்டல்களுக்கிடையே மாவட்ட நிர்வாகிகள் தங்கள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

தரவரிசையில் சம புள்ளிகள் பெற்ற மாவட்டங்களுக்கு பரிசு சான்றிதழ்கள் சமமாக பிரித்து வழங்கப்பட்டது.

இந்த ஆய்வு பணியை மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம், அப்சர் செய்யது, இளைஞர் அணி செயலாளர் அசாருதீன், ஆகியோர் கொண்ட குழு இறுதி செய்திருந்தது அப்சர், அவர்கள் தயாரித்த படிவ முறை அனைத்தையும் துல்லியப்படுத்தியிருந்தது.

அந்த வகையில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் 6 சான்றிதழ்களையும், கோவை மாவட்டம் 5 சான்றிதழ்களையும், திருவாரூர், மற்றும் கடலூர் மாவட்டங்கள் தலா 3 சான்றிதழ்களையும் பெற்று சென்றன.

பல மாவட்டங்கள் பரவலாக பல துறைகளில் ஒன்று, இரண்டு, என சான்றிதழ்களை பெற்று சென்றனர்.

இந்த உற்சாகமூட்டும் நிகழ்வு செயற்குழுவில் பெரும் வரவேற்பை பெற்றது.

பிறகு தீர்மானங்களை துணைப் பொதுச் செயலாளர்கள் ராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம். தாஜ்தீன், சீனி முகம்மது, தொடங்கி, மாநில துணைச் செயலாளர்கள் வரை அனைவரும் வாசித்தனர்.

நிறைவாக எழுச்சி மிகு ஒரு உரையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்ற, செயற்குழு ஆர்ப்பரித்தது.

பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
பத்திரிக்கையாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் அவர்கள் பொறுமையாக பதிலளித்தார்.

பிறகு கட்சியின் முழக்கங்கள் எழுப்பப்பட அனைவரும் பேரெழுச்சியோடு அதை எதிரொலித்தனர்.

இறுதியாக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.

அனைவருக்கும் மதிய விருந்தோம்பலை மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல், அவர்களின் வழிகாட்டலில் நெல்லை மாவட்ட மஜக வினர் அன்பொழுக நடத்தினர்.

செயற்குழு ஒழுங்குகள் சிறப்பாக அமைந்ததாக , இணைப் பொதுச் செயலாளர் JS . ரிபாயி, அவர்களிடம் பொதுச் செயலாளர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

பிறகு மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகளையும் சந்தித்து பொதுச் செயலாளர் பாராட்டினார்.

கலைய மறுத்த உணர்வுகளோடு அடுத்து தேர்தல் களத்தில் சந்திப்போம் களமாடுவோம் என்ற உறுதியோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்