ஜன.25., தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களுக்கு காயல்பட்டினத்தில் இளைஞர் ஐக்கிய முன்னனி (YUF) சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் தைமியா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், ஆகியோரும் வருகை புரிந்தனர். இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர், செயலாளர், மூத்த உறுப்பினர்கள், மற்றும் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு இளைஞர் முன்னணியின் கோரிக்கையான காயல்பட்டினம் தனி தாலுகா என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் பேசியதற்காக நன்றி தெரிவித்தனர். மேலும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு ஒன்றையும் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்களிடம் அளித்தனர். இறுதியாக ஏற்புரை ஆற்றிய மஜக பொதுச்செயலாளர் அவர்கள் இளைஞர் ஐக்கிய முன்னனியின் செயல்பாடுகளை சிலாகித்து பாராட்டி பேசினார், உங்களது பணிகளும் சேவைகளும் மென்மேலும் தொடர வேண்டும் உங்கள் முன்னணி பவளவிழா காண வேண்டும் என்றும் அந்த பவள விழாவிற்கு நீங்கள் எங்களையும் அழைக்க வேண்டும் என்று பேசினார். மேலும் இலக்கிய நிகழ்ச்சிகள் குறைந்து வருவதை
Month:
அமைதியும் ஒற்றுமையும் கொண்ட தேசத்தை கட்டமைப்போம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அவர்களின் குடியரசுதின வாழ்த்து செய்தி!
இந்திய திருநாடு தன் 72 வது குடியரசு தின விழாவை கொண்டாடுவது நமக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. மக்களாட்சி தத்துவத்தின் வெளிப்பாடுதான் குடியரசு என்ற சொல்லாடலின் பெருமிதமாக அறியப்படுகிதது. வெவ்வேறு இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் இருப்பினும் ஒன்றுபட்ட மக்களாக வாழ்வதே குடியரசின் சிறப்பாகும். இந்நாளில் வெறுப்பு அரசியல், சாதி, மத வெறி, வன்முறை , சுரண்டல் ஆகியவற்றுக்காக எதிராக போராட உறுதியேற்க வேண்டும். அமைதியும் ,ஒற்றுமையும் கொண்ட தேசத்தை கட்டமைத்து , ஜனநாயகம் செழித்திட நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று கூறி அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 25.01.2021
தற்கொலை செய்த நாகை விவசாயி ரமேஷ் பாபு! குடும்பத்தினருக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்.!
ஜனவரி 25, கடந்த சனிக்கிழமையன்று நாகையை சேர்ந்த விவசாயி ரமேஷ் பாபு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியதை பார்த்து மனமுடைந்து வேதனையில் இம்முடிவை அவர் எடுத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது இன்று அவரது இல்லத்திற்கு மஜக பொதுச் செயலாளரும்,நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தஞ்சையில் கடந்த வியாழன் அன்று நடந்த விவசாயிகளின் பச்சைக் கொடி பேரணிக்கு அவர் வருகை தந்ததை நினைவு கூர்ந்தவர், இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். அவரது மூத்த மகன் பட்டதாரியாக இருப்பதால் அவருக்கு அரசு வேலை கிடைக்க முயற்சிப்பதாகவும் கூறினார். அவருடன் மாவட்ட செயலாளர் செய்யது ரியாஸ் , பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சுல்தான், நாகை MLA அலுவலக மக்கள் தொடர்பாளர் முரளி ஆகியோரும் உடன் சென்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #நாகை_மாவட்டம் 25.01.2021
சமூக வலைதளங்களில் கட்டுப்பாடுகள் தேவை! விக்ரமசிங்கபுரம் ஜமாத்தார் வரவேற்பு நிகழ்வில் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
ஜன.25., நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விக்ரம சிங்கபுரம் ஜாமியா ஜீம்ஆ பள்ளியில் அவ்வூர் ஜமாத்தார் நடத்திய வரவேற்பு நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் "பிற மக்களோடு எவ்வாறு நட்புறவு பேன வேண்டும் "என்ற தலைப்பில் உரையாடினார். அதில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து, சுற்றுவட்டார மக்களுடன் நல்லுறவு பேணும் வழி வகைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக பேசினார். கல்வி விழிப்புணர்வில் கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசனை கூறியவர், சமூக வலைதளங்களில் பொறுப்பற்று சிலர் பதிவிடும் கருத்துக்கள் கண்டித்து பேசினார். அது போன்று பதிவிடுபவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார். அவரது உரை மிகவும் பயனுள்ள வகையிலும், பொறுப்புணர்வுடன் இருப்பதாகவும் ஜமாத்தினர் பாராட்டி வழிமொழிந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் அப்பாஸ், அம்பை ஒன்றிய செயலாளர் அன்சர் பாபு, ஒன்றிய துணை செயலாளர் ஜாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நெல்லை மாவட்ட துணை செயலாளர்
தென்காசி மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்!
ஜனவரி 25, தூத்துக்குடி, நெல்லை , தென்காசி மாவட்டங்களில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடர் கட்சி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் ஜமாத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அன்று இரவு 10.30 மணிக்கு தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு வருகை தந்தார். 3 மணி நேரம் தாமதமாக வந்த நிலையிலும், அந்த இரவில் திரளானோர் கூடி நின்று வரவேற்றனர். அங்கு நகர அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியினருடன் உரையாடி உற்சாகப்படுத்தினார். அடுத்த நாள் ஐனவரி 24 அன்று காலை புளியங்குடியில் கட்சி கொடியை ஏற்றினார். பிறகு Paart என்ற கல்வி அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றினார். மதியத்திற்கு பிறகு பண்பொழி, வடகரை, வாவா நகரம், அச்சன் புதூர், தென்காசி ஆகிய ஊர்களில் கட்சி கொடியை ஏற்றினார். நிறைவாக தென்காசியில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு தென்காசி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து அவரும், மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் உரையாற்றினர் 3 நாட்கள் தென் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து விட்டு குற்றாலத்தில்