அக்.20., உதகையிலிருந்து கூடலூர் செல்லும் பிரதான சாலைகள் மழையால் சேதமடைந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதை தொடர்ந்து அந்த சாலைகளை சீரமைக்கக்கோரி கூடலூர் நகராட்சி ஆணையரிடம் மஜக நகர செயலாளர் ஜீவா, அவர்கள் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கூடலூர்_நகரம் #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 20.10.2020
Month:
முதல்வருக்கு மஜக சார்பில் நேரில் ஆறுதல்! மஜக பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு!
அக்.20, தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களின் தாயார் மறைவையொட்டி, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, மாநிலச் செயலாளர் சீனி முகம்மது ஆகியோர் இன்று கிரீன் வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு முதல்வரை சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்துக் கொண்டனர். அப்போது அவருடன் அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம்.
மஜக நெல்லை மாவட்டம் பாளை பகுதியின் கலந்தாய்வு கூட்டம்.!துணை பொதுச்செயலாளர் தைமிய்யா துணைச்செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் பங்கேற்பு.!
நெல்லை.அக்.19., மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், பாளை பகுதி சார்பாக மாநகர் பகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 குறித்த கலந்தாய்வு கூட்டம் பாளை வண்ணார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பாளை பகுதி செயலாளர் ராபியாசேக் என்ற சேக் அப்துல் காதர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார், பொருளாளர் மைதீன் ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் காயல் அஹமது சாகிபு ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். மேலுல் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா உள்ளிட்டோர் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் பேசினர். நெல்லையில் மஜக தலைமை செயற்குழு கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ள தலைமை நிர்வாக குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அச் செயற்குழுவை சிறப்பான முறையில் நடத்திடவும். மேலும் மாநகர் பகுதிகளுக்கான தேர்தல் பணிகுழுவை விரைவில் அமைப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் A1 காயல் மைதீன், MJTS தலைவர் நாகூர்மீரான், மனித உரிமை பாதுகாப்பு அணி N.அப்பாஸ், வழக்கறிஞர் அணி மன்சூர்
நாகை ஒன்றியம் தெத்தி ஊராட்சி உறுப்பினர் மஜகவில் இணைந்தார்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
அக்.18, அக்.17 நேற்று தொடங்கி டிச.31 முடிய 75 நாட்கள் தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. மேலும் இதை முன்னிட்டு புதிய கிளைகள் வேகமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான இன்று நாகை மாவட்டத்திற்குட்பட்ட தெத்தி ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் ரியாஸ் மற்றும் திரளான இளைஞர்களும், மாணவர்களும் மஜக வில் இணைந்துள்ளனர். அவர்கள் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், MJTS தலைவர் நாகூர் ஜாஹிர், நாகூர் நகர பொருளாளர் சாகுல், துணை செயலாளர் அரபாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! நெல்லை மாவட்ட விவசாய அணி மாவட்ட செயளாலர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட விவசாய அணி மாவட்ட செயளாலராக, M ஜாகீர் உசேன் த/பெ; மைதீன் 19E/2 ஆர் பி மேலத்தெரு பேட்டை, திருநெல்வேலி. அலைபேசி; 9789124518. நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 18-10-2020