தென்காசியில் அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்த மஜகவினர்!!

தென்காசி:ஆக17.,

இந்திய தேசத்தின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பாக இரத்த தானம் நிகழ்ச்சி மாவட்ட துணை செயலாளர் ஆதம்பின் ஹனிபா, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதை தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனையில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் இரத்ததானம் செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது இபுராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை இனாயத்துல்லா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முகம்மது இஸ்மாயில், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ரவி, பண்பொழி அபுதாஹிர்,
நகர மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரகுமான், மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
15/08/2020