சென்னை.ஆகஸ்ட்.17.,
கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக 16-08-2020 அன்று “புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு இணையவழி கருத்தரங்கம்” நடைபெற்றது.
Zoom காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் பங்கேற்று புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஆபத்துகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேரலை மூலமாக இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்வையாளர்களாக இணைந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
16-08-2020