தென்காசி: அக்.27., தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் நகராட்சிக்குட்பட்ட காவிரி நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது அதை சரிசெய்து தருமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் V.M.ராஜலட்சுமி, அவர்களை சந்தித்து குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக மஜக வினர் மனு அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர் , வாவை இனாயதுல்லா, மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் சங்கை A.பீர்மைதீன், மற்றும் சங்கரன் கோவில் நகரச் செயலாளர் சுல்தான், நகர பொருளாளர் இத்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 26.10.2020
Month:
IUML அகில இந்திய தலைவருடன் மஜக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு.!
திருச்சி; அக்டோபர்-27., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவருமான மரியாதைக்குரிய K.M.காதர் முகைதீன் அவர்களை நேற்று (26-10-2020) மாலை உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா நாசர், இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ ஆகியோர் உடல்நலக் குறைவின் காரணமாக ஓய்வெடுத்து வரும் K.M.காதர் முகைதீன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். சந்திப்பின் போது காதர் முகைதீன் அவர்கள் தான் தற்போது முழு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார், மேலும் நாட்டு நடப்புகள் பற்றி கவலையுடன் பேசினார். 30 நிமிடங்கள் நடைபெற்ற இச்ச சந்திப்பின் போது மஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 26-10-2020
தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!
அக்.25, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகளை விளக்கிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே மஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் ஈர்க்கப்பட்டு மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதீன் வழங்கிட மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மல் உசேன், மாயவரம் நகர செயலாளர் சதீஸ் சத்யா ஆகியோர் உடனிருந்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #MJK2021 #மயிலாடுதுறை_மாவட்டம்.
MJVS தலைமையக நியமன அறிவிப்பு! மதுரை மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளராக, Nசையது மஸ்தான் த/பெ; நத்தர் அலி 3'வது தெரு கஸ்தூரி பாய் நகர் மேலூர், மதுரை 625106. நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 25-10-2020
குவைத் மண்டல MKP சார்பாக முகக்கவசம் விநியோகம்!
அக்.24, மஜக வின் வெளிநாட்டு பிரிவான குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பாக நேற்று (23/10/2020) தலைநகர் முர்காப் பகுதியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் முன்னிலையில் மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் முகக் கவசங்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார். வெள்ளிக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் உறவுகளை சந்தித்து அளவளாவ குழுமியிருந்தவர்கள் மத்தியில் முகக் கவச விநியோகம் நோயின் தீவிரத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்தது. வேலை இழப்பினால் துயருறும் தொழிலாளர்கள், சில பகுதிகளில் முகக்கவசம் கிடைக்காமல் அவதியுறுபவர்கள் மட்டுமின்றி MKP முன்னெடுத்திருக்கும் இலவச முகக்கவசம் வழங்கும் பணியினால் 400 க்கும் அதிகமானோர் பயனடைந்ததுடன் இப்பணியை தொடர வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இந்நிகழ்வில் குவைத் மண்டல துணை செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர், மண்டல வணிகர் அணி செயலாளர் SS நல்லூர் யாசின் மற்றும் திருவாடுதுறை ஆசிக் உள்ளிட்ட மஜகவினர் பங்கேற்று முகக்கவசங்களை அனைவருக்கும் விநியோகம் செய்தனர். தகவல், #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKPitWING #குவைத்_மண்டலம்.