IUML அகில இந்திய தலைவருடன் மஜக தலைமை நிர்வாகிகள் சந்திப்பு.!


திருச்சி; அக்டோபர்-27.,

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவருமான மரியாதைக்குரிய
K.M.காதர் முகைதீன் அவர்களை நேற்று (26-10-2020) மாலை உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா நாசர், இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ ஆகியோர் உடல்நலக் குறைவின் காரணமாக ஓய்வெடுத்து வரும் K.M.காதர் முகைதீன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

சந்திப்பின் போது காதர் முகைதீன் அவர்கள் தான் தற்போது முழு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார், மேலும் நாட்டு நடப்புகள் பற்றி கவலையுடன் பேசினார்.

30 நிமிடங்கள் நடைபெற்ற இச்ச சந்திப்பின் போது மஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
26-10-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.