தனிநபர் சந்திப்புகள் வாயிலாக மஜகவில் இணையும் சமூக ஆர்வலர்கள்!


அக்.25,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் ஒருபகுதியாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கட்சியின் செயல்பாடுகளை விளக்கிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே மஜகவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் ஈர்க்கப்பட்டு மயிலாடுதுறையில் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களை மஜகவின் உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் சங்கை தாஜூதீன் வழங்கிட மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மல் உசேன், மாயவரம் நகர செயலாளர் சதீஸ் சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #MJK2021
#மயிலாடுதுறை_மாவட்டம்.