மத்தியில் ஆளும் பாஜக அரசு, விவசாயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று மசோதாக்களும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இவை சாதாரண விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் நவீன வலையில் சிக்க வைக்கிறது. விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அவர்களுடைய நலன்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இதில் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்பு நமது விவசாயிகள் கைகட்டி நிற்கும் நிலையை இம்மசோதாக்கள் ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து மாநில அரசுகளிடமும், விவசாய பிரதிநிதிகளிடமும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு அவசரப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இம்மசோதாக்களை அதிமுக ஆதரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகள் சுட்டி காட்டும் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இம்மசோதாக்களை மாநிலங்கள் அவையில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் பெரும் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எச்சரிக்கின்றோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.09.2020
Month:
குடந்தையில் நீட் தேர்வை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மஜக ஆர்ப்பாட்டம்!
செப்.19, குடந்தையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நீட் தேர்வை கண்டித்தும், திரும்ப பெற மத்திய பாஜக அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட து.செயலாளர் இப்ராஹீம் ஷா தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநிலச் செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணியின் து. செயலாளர் காதர்பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மு. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், அமீரக செயற்குழு உறுப்பினர் யூசுப் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர மஜக வினர் திரளாக பங்கேற்றனர். இறுதியில், IKP நிர்வாகி அல்லாபாக்ஸ் நன்றி கூறினார். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.
வேலூரில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!
வேலூர்:செப்.19., வேலூர் CMC மருத்துவமனையில் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கொரோனா நோய் தொற்றால் இறந்ததாகவும், அவரை தாங்கள் அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மஜக வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 18.09.2020
நீடூர் நெய்வாசல் மஜக சார்பாக கபசுர குடிநீர் வழங்கல் !
செப்.18, மயிலாடுதுறை மாவட்டம் நீடூர்-நெய்வாசல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று பெரிய கடைத்தெருவில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜமாத்தார்கள், வணிகர்கள், சிறார்கள், பயணிகள் என திரளானப் பொதுமக்கள் அருந்தி பயனடைந்தனர். இதில் நீடூர் ஜெப்ருதீன், மிஸ்பாஹூதீன், லியாகத்அலி, அசாருதீன், ஹாஜா, அப்துல்மஜிது, அக்பர் அலி, ஹனிபா, சர்புதீன், குர்ஷீத்கான், ஃபகத், பஜிருல்லா மற்றும் சலாவுதீன் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டு கபசுர குடிநீரை விநியோகித்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #மயிலாடுதுறை_மாவட்டம்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக சட்டசபையில் மு தமிமுன் அன்சாரி MLA உரை!
கடந்த 16.09.2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை 2020 குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதில் பேசினார். அவரது உரையிலிருந்து... மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.., மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய புதிய கல்விக் கொள்கை, 2020 என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சமூகங்களில் நலிந்த பிரிவினர்களை ஆரம்ப நிலையிலேயே வடிகட்டிட வேண்டுமென்ற நோக்கத்தோடு, எதிர்காலத்திலே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென்ற பேராபத்தோடு இந்தப் புதிய கல்விக் கொள்கைகளிலே பல்வேறு விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதில் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட என்ற வாசகம் நீக்கப்பட்டு, சமூக, பொருளாதார சாதகமற்ற குழுக்கள், அதாவது, socio-economically disadvantaged group என்ற சொல்லாடல் இடம் பெற்றிருப்பதை நாம் எல்லோரும் கூர்ந்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதிலே, மிகப் பெரிய சமூக பேராபத்து அடங்கியிருக்கின்றது. இந்த வாசகத்தை புரிந்துக் கொள்வோமேயானால், இந்தச் சட்டத்தை, திட்டத்தை நாம் எவ்வாறெல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதற்கான ஆயத்த பணிகளிலே ஈடுபட முடியும். 5-ம்