செப்:21., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி மாநகரத்தில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். ஆவடி மாநகர செயலாளர் S.சாகுல் அமீது அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் A.அக்பர் உசேன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் புதுமடம் அணீஸ், மாநிலத் துணைச் செயலாளர் சமீம் அகமது ஆகியோர் முன்னிலையில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு வாழ்த்துக் கூறி மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் P.பஷீர் அகமது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் M. முகமது இலியாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளூர்_மேற்கு_மாவட்டம் 21-09-2020
Month:
மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம்.!
செங்கை.செப்.20., தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், அனகை நகரம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நீட்டுக்கு பலியான மாணவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர் மத்திய அரசுக்கு எதிராகவும், நீட்டை தமிழகத்தில் தடைசெய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்ஷாத், அனகை அப்துல்லா, ஆலந்தூர் சலீம், மாவட்ட அணி நிர்வாகிகள் எச்.அப்துல் சமது, த.அப்துல்லா, அனகை சலிம், நகர நிர்வாகிகள் இஸ்மாயில், கமாலுதீன், மோகன், நரேஷ், தமிழ், சேக், முஜிபுர், அன்சாரி உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்பரித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #செங்கை_வடக்கு_மாவட்டம் 20-09-2020
IKP கத்தார் மண்டல மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி!
மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் (IKP) சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Zoom காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு MKP மண்டல செயலாளர் ஆயங்குடி யாசீன் தலைமை தாங்கினார், N.கைஸ், ஜாசிம் ஆகியோர் இறை வசனம் கூறி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தனர். நிகழ்ச்சியில் மஜக மாநில அவைத் தலைவர் நாசர் உமரி அவர்கள் "கொரோனாவும் நமது பணிகளும்" என்ற தலைப்பிலும், அதை தொடர்ந்து மெளலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள் "மனதால் உயர்வோம்" என்ற தலைப்பிலும், அதைத்தொடர்ந்து மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் அவர்கள் மீட்புபணிகளின் மூலம் இறைவனின் திருப்பொருத்தத்தை எவ்வாறு பெறுவது என கருத்துறையாற்றினார். இறுதியாக கத்தாரின் பிரபல அழைப்பாளர் மற்றும் SLIC தலைவர் S.L.ஸியாவுதீன் மதனி, அவர்கள் சமூக பணிகளும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் நாம் கவனமாக எவ்வாறு கையாளுவது என்று விரிவுரையாற்றினார். இந்நிகழ்வில் MKP கத்தார் மண்டல நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், QMF து. தலைவர் தஸ்தகீர், காத்தார் ஜமாத் நிர்வாகிகள், வளைகுடா MKP நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை Zoom காணொளி மூலம் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிஸார்
தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மரணம்!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்கள் கொரோனா தொற்றால் இறந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தோம். ஈழத் தமிழர்களின் தீவிர ஆதரவாளராகவும், தமிழ் இன பற்றாளாராகவும் வாழ்ந்த அவர் ஏராளமான தமிழ் படைப்பாளிகளின் நூல்கள் வெளிவரவும் துணை நின்றவர். சிறந்த வணிகராகவும் இயங்கிய அவர், தமிழ் தேசிய பணிகள் செழித்து வளர தனது பங்களிப்புகளை செய்து வந்தார். அவரை இழந்து வாடும் அண்ணன் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 20.09.2020
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் உடலை நல்லடக்கம் செய்த கள்ளக்குறிச்சி மஜக!
செப்.19, விழுப்புரம், எடப்பாளையத்தை சேர்ந்த கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று மஜகவினரால் மருத்துவமனையிலிருந்து பெற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர ஊர்தி மூலம் சொந்த ஊர் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவச் சேவை அணி செயலாளர் ஜாவித் தலைமையிலான மஜக குழுவினர் பாதுகாப்பு வழிகாட்டல் நெறிமுறைகளை பேணி உடலை நல்லடக்கம் செய்தனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம்.