மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவையின் (IKP) சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Zoom காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு MKP மண்டல செயலாளர் ஆயங்குடி யாசீன் தலைமை தாங்கினார், N.கைஸ், ஜாசிம் ஆகியோர் இறை வசனம் கூறி நிகழ்ச்சியை ஆரம்பம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மஜக மாநில அவைத் தலைவர் நாசர் உமரி அவர்கள் “கொரோனாவும் நமது பணிகளும்” என்ற தலைப்பிலும், அதை தொடர்ந்து மெளலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள் “மனதால் உயர்வோம்” என்ற தலைப்பிலும், அதைத்தொடர்ந்து மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் அவர்கள் மீட்புபணிகளின் மூலம் இறைவனின் திருப்பொருத்தத்தை எவ்வாறு பெறுவது என கருத்துறையாற்றினார்.
இறுதியாக கத்தாரின் பிரபல அழைப்பாளர் மற்றும் SLIC தலைவர் S.L.ஸியாவுதீன் மதனி, அவர்கள் சமூக பணிகளும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் நாம் கவனமாக எவ்வாறு கையாளுவது என்று விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் MKP கத்தார் மண்டல நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், QMF து. தலைவர் தஸ்தகீர், காத்தார் ஜமாத் நிர்வாகிகள், வளைகுடா MKP நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை Zoom காணொளி மூலம் மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிஸார் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மருத்துவ சேவை அணி செயலாளர் ஷேக் அலாவுதீன், நன்றியுரையாற்றினார்.
தகவல்,
#இஸ்லாமிய_கலாச்சாரப்_பேரவை
#கத்தார்_மண்டலம்.
18/09/2020