You are here

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மரணம்!மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது அவர்கள் கொரோனா தொற்றால் இறந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தோம்.

ஈழத் தமிழர்களின் தீவிர ஆதரவாளராகவும், தமிழ் இன பற்றாளாராகவும் வாழ்ந்த அவர் ஏராளமான தமிழ் படைப்பாளிகளின் நூல்கள் வெளிவரவும் துணை நின்றவர்.

சிறந்த வணிகராகவும் இயங்கிய அவர், தமிழ் தேசிய பணிகள் செழித்து வளர தனது பங்களிப்புகளை செய்து வந்தார்.

அவரை இழந்து வாடும் அண்ணன் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினருக்கும், குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
20.09.2020

Top