செப்.25, கறம்பக்குடியில் கடந்த இரண்டு மாத காலமாக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு தார் சாலை போடாமல் தாமத்திக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மஜக சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் வரும் 28 திங்கள் கிழமை அன்று சாலையில் படுத்து உறங்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வந்தன. இப்போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக இன்று காலை முதல் தார் சாலை போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கும், கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கறம்பக்குடி_பேரூர் #புதுக்கோட்டை_மேற்கு
Month:
மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களை நெல்லை மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.!
நெல்லை.செப்.25., பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, அவர்களை இன்று நெல்லை மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இச்சந்திப்பில் மாநில துணைச் செயலாளர் காயல்பட்டினம் சாகுல் ஹமீது, நெல்லை மாவட்டச் செயலாளர் நிஜாம் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 25.09.2020
திராவிடத்தையும் தமிழர் மரபையும் மறைக்கும் முயற்சியா? மத்திய அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
12ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியக் கலாச்சாரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு அமைத்துள்ள அறிஞர் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை. தமிழகத்தை வழக்கம் போல இதிலும் புறக்கணித்திருக்கிறார்கள் என்ற கோபம் பரவலாகி வருகிறது. இந்தியாவின் மிகத் தொன்மைவாய்ந்த மொழி தமிழ் என்பதும், தமிழரின் பண்பாடும், நாகரிகமும் மிகத் தொன்மை வாய்ந்தவை என்பதும் நிரூபிக்கப்பட்டவை. இதை சிந்துவெளி அகழாய்வு முதல் கீழடி அகழாய்வு வரை எடுத்துக்காட்டியுள்ளன. திராவிட மொழிகள் அனைத்தும் மிக பழமை வாய்ந்த வரலாற்று மொழிகள் ஆகும். அது போல் வடகிழக்கு மாநிலங்களின் வரலாறும் தொன்மையானவை. வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உண்மைகளைப் புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு அமைத்த இந்தக் குழு பன்மைத் தன்மைகள் அற்றதாக உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். வரலாற்று திரிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் குறிப்பிட்ட உயர் சாதியினரை முன்னிலைப்படுத்தி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குதிரையை குதிரை என்றும், கடலை கடல் என்றும், மலையை மலை என்றும் சொல்வதே அறிவுடைமையாகும். இதை மாற்றி சித்தரிக்கும் முயற்சியில் யார் ஈடுபட முயன்றாலும் அது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகும். இது போன்ற வரலாற்று ஆபத்துகள் ஏற்படக் கூடாது என்பதே எல்லோரின் கவலையாகும். எனவே இத்துறையில் வல்லமை
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, ஜெ.சாகுல் ஹமிது த/பெ: ஜெய்னுல் ஆபிதின் 6/869, பள்ளிவாசல் தெரு, திருப்பூன்டி.611110. நாகை மாவட்டம். அலைபேசி: 9443276706, 7604834814 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 25-09-2020
குடந்தையில் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக போராட்டம். மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு!
செப்.24, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் வேளாண் மசோதா நகல் எரிக்கும் போராட்டம் இன்று குடந்தையில் நடைப்பெற்றது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மஜக சார்பாக, மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, சையது இப்ராஹிம், அணி செயலாளர்கள் உபைஸ் கரீம், முஹம்மது அலி, சாஜித், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி உள்பட மஜகவினர் திரளான கலந்துக் கொண்டனர். முன்னதாக, விவசாய சட்ட மசோதாவை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி மஜக சார்பில் நகர் முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.