மஜக அறிவித்த படுத்து உறங்கும் போராட்டம்! தொடங்கியது தார் சாலைக்கான பணி!!

செப்.25,
கறம்பக்குடியில் கடந்த இரண்டு மாத காலமாக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு தார் சாலை போடாமல் தாமத்திக்கப்பட்டு வந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், மஜக சார்பில் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் வரும் 28 திங்கள் கிழமை அன்று சாலையில் படுத்து உறங்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வந்தன.

இப்போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக இன்று காலை முதல் தார் சாலை போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கும், கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #கறம்பக்குடி_பேரூர்
#புதுக்கோட்டை_மேற்கு

Top