மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட துணைச்செயலாளராக, C.லெட்சுமணன் த/பெ; சின்னையா No.17 அம்புக்கோயில் ரோடு கறம்பக்குடி அலைபேசி; 9442622602 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 10-09-2020
Month:
புதிய கல்வி கொள்கையா? கல்வி கொலையா? மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கேள்வி.
செப்.9, "தேசிய கல்வி கொள்கையை நிராகரி" என்ற முழக்கத்தோடு கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர் காணொளி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இதில் பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், பல்துறை அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கைக் கோர்த்துள்ளனர். இன்றைய கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுப்பராயன் அவர்களும் பங்கேற்று உரையாற்றினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... நாட்டின் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். மத்திய பாஜக அரசு, மோடி அரசு எதை செய்தாலும் எதிர்ப்பதா? என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். அவர்கள் செய்வது எல்லாம் மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதால்தான் நாம் எதிர்க்கிறோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு மலையின் மீது பாதை அமைப்பது என்பது முயற்சி. ஒரு மலையை குடைவது என்பதும் ஒரு முயற்சிதான். ஆனால் ஒரு மலையை பிடுங்கி கடலில் தூக்கிப் போட நினைப்பது வீணான முயற்சி. நடக்காத முயற்சி. இதைத் தான் மத்திய பாஜக அரசு செய்கிறது. அதனால் தான் நாட்டு நலன் கருதி
ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!
ஈரோடு:செப்.09., ஈரோடு மாநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் (பெண்) வயது 58, வீரப்பன்சத்திரம் இறந்ததாகவும், அவரை தாங்கள் கண்ணியமாக அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக், அவர்கள் தலைமையில் இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர். ஈரோட்டில் கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்கள் அடக்கம் செய்த இந்த உதவிக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 09.09.2020
நாகையில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு மு தமிமுன் அன்சாரி MLA பாராட்டு!
செப்.8, இவ்வாண்டு 2020 நல்லாசிரியருக்கான விருதினை நாகை தொகுதியை சேர்ந்த திருமதி நா.கலாராணி (திட்டச்சேரி), க.விஜயலெட்சுமி (நாகூர்), க.வசந்தா (நாகப்பட்டினம்) ஆகிய மூன்று தலைமையாசிரியைகள் பெற்றுள்ளனர். அவர்களை MLA அலுவலகம் வரவழைத்து மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் சிறப்பு செய்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவு கேடயங்களை வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவவலர் திரு.குணசேகரன், சென்ற வருடம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திரு.ரவி அவர்களும் உடன் இருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய MLA அவர்கள், இது உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு தந்த நல்லாசிரியர் விருது என்றார். உங்களிடம் படித்து செல்லும் மாணவர்கள் என்றாவது ஒரு நாள் நேசத்தோடு உங்களை தேடி வந்து நன்றி பாராட்டுவார்கள். அது இதைவிட பெரிய விருதாக இருக்கும் என்றும் கூறினார். எனவே உங்களிடம் படிக்கும் பிள்ளைகளை பொது நல அக்கறை உள்ளவர்களாகவும், உயரிய சிந்தனையாளர்களாகவும் உருவாக்குவது அவசியம் என்று கூறினார். தங்களை அலுவலகத்திற்கு அழைத்து கவுரவித்தது மகிழ்ச்சி அளித்தது என்று நல்லாசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் புதிய கல்வி கொள்கையின் பல ஆபத்தான அம்சங்களை விளக்கும் துண்டறிக்கைகளும் வழங்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர்
தலைமையக நியமனம் அறிவிப்பு.! MKP கத்தார் மண்டல அணி நிர்வாகிகள்
மஜக சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டல அணி நிர்வாகிகளாக, மண்டல மருத்துவ சேவை அணி செயலாளராக, 1) ஷேக் அலாவுத்தீன் அலைபேசி; 77198213 மண்டல தொண்டரணி செயலாளராக, 2) மாயவரம் பாபு அலைபேசி; 55349865 மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக, 3) மேலை ஜுபைர் அலைபேசி; 55753445 மண்டல மக்கள் தொடர்பு செயலாளராக, 4) மேலை இக்பால் அலைபேசி; 33456015 மண்டல கொள்கை பரப்பு செயலாளராக, 5) அத்திக்கடை பாருக் அலைபேசி; 55525715 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 08.09.2020