நீட் பயிற்சி தேர்வுக்கான தயார் நிலையில் இருந்த போது அச்சம் மற்றும் மன உளைச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்திருப்பது தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் ஜோதி ஸ்ரீ துர்கா, தர்மபுரி மாவட்டத்தில் ஆதித்யா, நாமக்கல் மாவட்டத்தில் மோதிலால் என மூன்று பிஞ்சுகளை ஒரே நாளில் பறிகொடுத்திருக்கிறோம். வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடிக்க வேண்டியவர்கள் சவப்பெட்டிகளில் மாண்டு கிடப்பது வேதனையளிக்கிறது. இந்த தற்கொலைகளுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். எதிர்கால இளவல்களை இழந்து நிற்கும் இக்குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவிகள் போதாது. அவற்றை மும்முடங்கு உயர்த்தி கொடுக்க வேண்டும். அது போல் இந்த தற்கொலைகளுக்கு காரணமான மத்திய அரசு, இக்குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழக மாணவர் சமுதாயம் தலை நிமிர்ந்து போராட தயாராக வேண்டிய தருணத்தில், தற்கொலை எண்ணங்களை தூக்கியெறிய வேண்டும் என்றும், விரிந்து கிடக்கும் பெரும் உலகில் தன்னம்பிக்கையோடு வாழ உறுதி ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 13.10.2020
Month:
ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் கூடாது..! மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் தீர்மானம்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு இன்று காணொளி வழியாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைப்பெற்றது. இதில் ZooM வழியே பங்கேற்க வாய்ப்பிருந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அவைத் தலைவர் நாசர் உமரீ, இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் தைமியா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம்.தாஜ்தீன், ராசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.. 1. சிறைவாசிகளை பாரபட்சமற்ற முன் விடுதலை செய்ய வேண்டும் : பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்வதில் பாரபட்சமற்ற அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். கலவர வழக்குகளில் கைதாகி 10 ஆண்டுகளை கடந்து தண்டனை அனுபவித்த அனைத்து கைதிகளையும் சாதி, மதம் பாராமல் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். 2.நீண்ட கால பரோல் வழங்க சட்ட ஆலோசனை: பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில், தமிழக ஆளுநர் தொடர்ந்து மௌனம் கடைப்பிடிக்கும் நிலையில், கவர்னர் முடிவெடுக்கும் வரை அவர்களுக்கு நீண்டகால பரோல் வழங்க சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து நல்லதொரு முடிவெடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். 3.மறைவிற்கு
தலைமையக மனிதநேய கலாச்சார பேரவை (MKP) குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) குவைத் மண்டல செயற்குழு உறுப்பினர்களாக, 1) தஞ்சை M.சையது அபுதாஹிர் த/பெ; முஹம்மது அப்துல்லாஹ் 2) வேலூர் K.ஷேக் இம்ரான் த/பெ; A.B.காசிம் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 12-09-2020
நீலகிரியில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்!!
நீலகிரி.செப்.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மஜக-வில் இணைந்து வருகிறார்கள். அதன் ஒரு நிகழ்வாக நீலகிரி கிழக்கு மாவட்டம் குன்னூரில் திரளான இளைஞர்கள் நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் காலிப், கமாலுதீன், அமித், ரிஸ்வான், சாதிக், தப்ரேஸ் ஆகியோர் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சாரைசாரையாக மக்கள் மஜக-வில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 11.09.2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருவாரூர் மாவட்ட அணி நிர்வாகிகள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட அணி நிர்வாகிகளாக, இளைஞரணி மாவட்டச் செயலாளராக, B.ரஹ்மத்துல்லா BE த/பெ; பசீர் அகமது 54. கடைகாரத் தெரு கட்டிமேடு.614716 திருத்துரைப்பூண்டி. NT.K அலைபேசி; 9788790515 விவசாய அணி மாவட்ட செயலாளராக, A.J.நஜிபுதீன் த/பெ; T.M.அப்துல் ஜப்பார் 2/5 பள்ளிவாசல் நடுத்தெரு, எரவஞ்சேரி.609501 திருவாரூர் அலைபேசி; 9047943559 தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளராக, S.முகம்மது ஆசிப் த/பெ; சலீம் சேவுவீட்டு தெரு கட்டிமேடு-(PO)- 614716 திருத்துறைப்பூண்டி (TK) திருவாரூர்(DT) அலைபேசி; 9942827675 ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11-09-2020