கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சேலத்தில் மஜக சார்பில் கபசுர குடிநீர் வினியோகம்!


சேலம்:ஆக.04.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை தொடர்ந்து சேலம் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் சர்புதீன், அவர்கள் அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் சனாவுல்லாகான், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஹசன், மாவட்ட பொருளாளர் விக்னேஷ், மாவட்ட துணை செயலாளர் சாகுல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஷா, மாவட்ட செயலாளர் தஸ்தகீர், மாவட்ட இளைஞரணி பொருளாளர் யாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அஷ்ரப், கொண்டாலம்பட்டி பகுதி செயலாளர் மைதீன், பொருளாளர் சரத்குமார், துணை செயலாளர் சவுக்கத் அலி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சேலம்_மாவட்டம்
04.08.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*