நெல்லை ஆக.20 மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், ஆற்றங்கரை கிளை மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தும் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ராதாபுரம் ஒன்றிய செயளாலர் காஜா, ஆற்றங்கரை பள்ளி கிளை செயளாலர் ஷெரிப், துணை செயளாலர் ரஹ்மத்துல்லாஹ், முபாரக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர், இதில் 500-க்கும் மேற்பட்டோர் கபசுரக்குடிநீர் பருகி பயணடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்தொழில்நுட்பஅணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 20-08-2020
Month:
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!-திருவண்ணாமலை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச்செயலாளராக, M.முஸ்தபா B.com த/பெ;M.மதார் 51 பள்ளி வாசல் தெரு, கடம்பை, கீழ்பென்னாத்தூர் திருவண்ணாமலை; 606611 அலைபேசி; 9123588017 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 20-08-2020
மஜக கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
ஆகஸ்ட்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அலுவலகம் திறப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை போன்ற முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சாதிக் அலி, முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர பொருளாளர் ஐயப்பன் உள்ளிட்ட அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 19-08-2020
முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளாலா நாசர் நேரில் சென்று மரியாதை!
ஆகஸ்ட்.20., திமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது மகன்கள் பொறியாளர் ரியாஸ், டாக்டர் ஜூபேர் ஆகியோரை சந்தித்து மஜக சார்பில் ஆறுதலை தெரிவித்தார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING 20-08-2020
முன்னாள் அமைச்சர் ரஹ்மான் கான் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. மாணவர் அரசியலில் களமாடி, ஆதிக்க இந்திக்கு எதிராக போராடியவர். பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் பாராட்டப் பெற்று, கலைஞர் அவர்களின் நேசத்திற்குரிய உடன்பிறப்பாய் திகழ்ந்தவர். சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர். எதிர்கட்சி உறுப்பினராய் பணி புரிந்த காலங்களில் சட்டசபையில் 'இடி' முழக்கம் எழுப்பியவர் என்பதும், அமைச்சராய் பணி புரிந்தப் போது அடக்கத்துடன் செயலாற்றியவர் என்பதும் அவரது சிறப்புகளாகும். நான் புதுக்கல்லூரியில் பயின்ற போது, 1996-ஆம் ஆண்டு விடுதி நாள் விழாவுக்கு வருகை தந்தார். அன்று அவர் ஆற்றிய உரை கம்பீரமாய் இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பளீர் சிரிப்பை வெளிக்காட்டுவது அவரது இயல்பாகும். அவருடன் உரையாடும் போது அரசியல் விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உலக நிகழ்வுகள், வரலாற்று அறிவு என அவரது பேச்சில் தகவல்கள் நிறைந்திருக்கும். இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றல் மிகு கொள்கையாளரை இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக