பெரம்பலூர்:ஆக.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன், ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஆசிப்ராஜா, அப்துல் ஹக்கீம், அப்துல் ரஹ்மான், கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #பெரம்பலூர்_மாவட்டம். 14/08/2020
Month:
இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் – தமிழக அரசின் அறிவிப்பு குறித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேட்டி.!
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!! – தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக ச.அப்துல் சலாம் த/பெ; கு.சர்தார் 49. PKT சாலை பேராவூரணி, தஞ்சை; 614804 அலைபேசி; 75022 55457 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 14-08-2020
மஜக திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.!
திருச்சி.ஆகஸ்ட்.13., திருச்சியில் வேகமாக பரவி வரும் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கிளையின் சார்பாக இரண்டாம் கட்டமாக நடைபெற்றது, நிகழ்வுக்கு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) மாவட்டச்செயலாளர் G.K.காதர் அவர்கள் தலைமை தாங்க, மஜக திருச்சி மாவட்டச் செயலாளர் பாபுபாய் அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்து அரியமங்கலம், உக்கடை போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஜமாலுதீன், மாவட்ட இளைஞரணி செயலாளர் புரோஸ்கான், மாவட்ட வணிகர் சங்க (MJVS ) செயலாளர் அபூபக்கர் சித்தீக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்பாஸ் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மற்றும் அரியமங்கலம் கிளையின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருச்சி_மாவட்டம் 13/8/2020
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டம் கூடலூரில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மஜகவினர்!!
நீலகிரி.ஆக.13., தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கூடலூர் கோக்கால் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். மஜக தொண்டர்களின் தன்னார்வப் பணியை அங்குள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_மேற்கு_மாவட்டம் 13.08.2020