நாகையில் 73வது குடியரசு தின விழா! கொரோனா முன்களப் பணியாளர்கள் கௌரவிப்பு…!

ஜனவரி-26, நாகை நகர மஜக சார்பாக இந்திய திருநாட்டின் 73 வது குடியரசு தின விழா நகர செயலாளர் அஜிஸ் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

மாநில துணை செயலாளர் நாகை முபாரக் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அரசகுமார் அவர்களை கவுரவிக்கும் வகையில் அவரை தேசிய கொடியேற்ற வைத்து, சால்வை அணிவித்து நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

மேலும், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பாஸ்கரன், முருகேசன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்து நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது. நாகை முஸ்லிம் ஜமாத் தலைவர் பாருக் ராஜ், செயலாளர் பகுருதீன், நாகை இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் நிஜாமுதின் அன்வாரி, வர்த்தக பிரமுகர்கள், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் செய்யது முபாரக், நகர துணை செயலாளர் செல்லதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_நாகை_மாவட்டம்