ஜூலை.17., கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் IPS அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ் தலைமையில் மஜகவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர். அச்சமயம் கார்டூனிஸ்ட் வர்மாவால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூனை மறு பதிவாக வெளியிட்ட கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் மனுவும் அளிக்கப்பட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுவை பெற்றுக்கொண்டு உடனே தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகரச் செயலாளர் அமீர்கான் மற்றும் மாநகர பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம். 16-07-2020
Month:
கோவை மாவட்ட மஜக தலைமையகத்திற்கு தப்லீக் ஜமாத் தலைவர்கள் வருகை!!மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களுடன் சந்திப்பு.!
கோவை:ஜூலை.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு தப்லீக் ஜமாத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்து மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில் கொரோனா தொடங்கிய காலம் முதல் டெல்லியிலிருந்து தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் வரவழைத்தது, தற்போது வெளிநாட்டு தப்லீக் சகோதரர்களை சென்னை புழலில் இருந்து மாற்றி ஹஜ் இல்லத்தில் தங்க வைத்தது உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்தும் அதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி MLA., அவர்களின் முன்னெடுப்பு முயற்சிகள் குறித்தும் தப்லீக்கினர் நினைவு கூர்ந்தனர். மேலும் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தப்லீக் ஜாமாத்தினருக்கு உதவிய மஜகவினருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். தப்லீக் ஜமாத்தினரிடம் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் கூறும்போது, தப்லீனரின் விவகாரத்தில் ஆரம்பம் முதல் மஜக பொதுச்செயலாளரின் முன் முயற்சிகள் குறித்தும், கோவை மாவட்ட மஜகவினரின் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வரக்கூடிய காலங்களில் கோவையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட வேண்டும் எனவும் அவர்களிடத்தில் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது IKP மாநில செயலாளர் லேனா இஷாக்,
திருவண்ணாமலை மஜக சார்பில் கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசம் விநியோகம்.!
ஜூலை.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை திருவண்ணாமலை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் நகரச் செயலாளர் G.அக்பர் அவர்கள் தலைமையில் நகரப் பொருளாளர் H.அம்ஜத் கான் முன்னிலையில் காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் பலருக்கும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் சையத் அலி அவர்கள் நிகழ்வை துவக்கி வைத்தார், IKP மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் H.அமிர் கான் ஆகியோரும் உடன் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #திருவண்ணாமலை_மாவட்டம் 16-07-2020
MKP கத்தார் மண்டலத்தின் தொடர் மனிதநேய சேவைகள்..!
ஜூலை.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் (MKP) சார்பாக கத்தாரில் சிக்கித் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பிடும் வகையில், இரண்டாம் கட்டமாக MKP கத்தார் மண்டலம் சார்பாக வந்தே பாரத் திட்டத்தில் திருவனந்தபுரம் (கேரளா), சென்னை ஆகிய விமான நிலையங்களுக்கு பயணசீட்டுகள் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. மேலும், திருவனந்தபுரம் வந்திறங்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு குமரி மாவட்ட மஜக-வினர் அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுத்து அவர் அவர் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இன்று தாயகத்திற்கு செல்லும் தமிழர்களை வழியனுப்பும் நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன், மண்டல பொருளாளர் நாகை பரமானுல்லா, துணைச் செயலாளர்கள் ஆயங்குடி யாசீன், சிதம்பரம் நூர் அஹமத், மண்டல ஆலோசகர் பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல், #மனிதநேயகலாச்சாரப்பேரவை #MKPitWING #கத்தார்_மண்டலம்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த உடல் நல்லடக்கம்! காயல் மஜகவின் மானுட சேவை!
காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டதற்கிணங்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மஜக வின் மாநில துணைச்செயலாளர் A.R.சாகுல் ஹமீது தலைமையில் உடலைப் பெற்று குடும்பத்தினருடன் இணைந்து மஜகவினர் அரசின் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பேணி உடலை நல்லடக்கம் செய்தனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #காயல்பட்டினம்_நகரம். 15/07/2020