மே 31, இன்று TMJK ஒருங்கிணைப்பில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறை கைதிகளை விடுவிக்க கோரி சமூக இணையதள போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. ஆதரவோடு நில்லாமல் தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் களத்தில் பங்கேற்று போராட்டத்தை ஒருங்கிணைப்பார்கள் என்றும் தலைமையகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் பதாகை ஏந்தி பங்கேற்றார். திரளான மஜக வினர் சமூக இடைவெளியுடன் வீதியோரத்தில் இரு வரிசைகளாக நின்று பதாகை ஏந்தி முழக்கமிட்டனர். அங்கு ஊடகத்தினரிடம் பேசிய அவர், 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் தமிழக அரசு கருணைக் காட்டி முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதில் சாதி, மத, வழக்கு பேதங்களை காட்டக் கூடாது என்றும் கூறினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், வேதை ஒன்றிய செயலாளர் சலீம், துளசியாப்பட்டினம் கிளை செயலாளர் இப்ராகிம் ஷா உள்ளிட்ட திரளான மஜகவினர் அணிவகுத்தனர். தமிழகம் முழுக்க மஜக வினர் சமூக இடைவெளியுடன் முன்னெடுத்த இப் போராட்ட களத்தில் மஜக வின் தலைமை நிர்வாகிகள்,
Month:
வீட்டு வாடகை மற்றும் தவணை கட்டணத்தை செலுத்த வற்புறுத்தக்கூடாது! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
தமிழகத்தில் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற சுய உதவிக் குழுக்களை மாதத் தவணையை செலுத்திடுமாறு அந்நிறுவனங்கள் வற்புறுத்துவதாக தெரிகிறது. கொரணா காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்திர தவணை தொகையை கட்ட வற்புறுத்தக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதை தனியார் நிதி நிறுவனங்கள் மீறுவது கண்டிக்கத்தக்கது. அது போல் பொதுவாக வருமான இழப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ள நிலையில், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்காரர்களிடம் வாடகை கேட்டு வற்புறுத்தக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இதுவும் மீறப்படுகிறது. இது கனிவு காட்ட வேண்டிய ஒரு மனிதாபிமான பிரச்சனையாகும். இவற்றை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இப்பிரச்சனைகளை கனிவுடன் அணுக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 30.05.2020
இணையவழி MKP கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி. மஜக இணைப் பொதுச்செயலாளர் JS ரிபாயி பங்கேற்று சிறப்புரை!
மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டலம் சார்பாக இணைய காணொளி வாயிலாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S ரிபாயி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரையில், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை மேற்கோள்காட்டியும், இதுவே இந்த ரமலான் நமக்கு கற்று தந்த பாடமாக இருக்கும் எனவும், அரவணைப்போடும், அனுசரனையோடும் உற்சாகமாக பணியாற்றிடுமாறு தனது உரையில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கத்தார் மண்டல MKP யின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணைச்செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் பேசினார். இந்நிகழ்வில், கத்தார் மண்டலச் செயலாளர் தைக்கால் சகாபுதீன், பொருளாளர் மஞ்சகொல்லை ஃபார்மானுல்லாஹ், துணைச்செயலாளர்கள் சிதம்பரம் நூர் முகம்மது, திருச்சி நசீர் பாஷா, பரங்கிப்பேட்டை ஃபாரூக் மற்றும் நிர்வாக குழு நிர்வாகிகளான முஹம்மது உவைஸ், அப்துல் ராஜ்ஜாக், அப்துல் ஃபத்தாஹ், சுபைர், இக்பால், முன்னாள் துஹைல் மாநகர பொருளாளர் அத்திக்கடை பாரூக் மற்றும் தாயக நிர்வாகிகளும், துபாய், குவைத் நிர்வாகிகளும், சகோதர அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் திருப்பத்தூர் நிசார்
கத்தாரில்_சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட MKP நிர்வாகிகள்
தோஹா.மே.28., கத்தாரில் நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் வேலைதேடி வந்த இடத்தில் ஏஜன்டால் ஏமாற்றபட்டு தனது ஸ்பான்ஸரும் கைவிட்ட நிலையில் ஓரு வாரமாக சரியாக உணவின்றி, தங்க இடமின்றி தவித்து வந்தனர். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் மற்றும் மஜக அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல துணைச் செயலாளர் கஃதீர் ஆகியோர் கைவிடப்பட்ட நபர்கள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து. உடனே அந்த 5 நபர்களையும் இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் சென்று முறையாக புகார் அளித்துவிட்டு தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர் மேலும் அவர்கள் தாயகம் செல்லும் வரை உணவு மற்றும் தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். நெல்லை அப்துல் அஜீஸ் உடனிருந்தார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 29.5.2020