இணையவழி MKP கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி. மஜக இணைப் பொதுச்செயலாளர் JS ரிபாயி பங்கேற்று சிறப்புரை!


மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டலம் சார்பாக இணைய காணொளி வாயிலாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S ரிபாயி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

உரையில், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை மேற்கோள்காட்டியும், இதுவே இந்த ரமலான் நமக்கு கற்று தந்த பாடமாக இருக்கும் எனவும், அரவணைப்போடும், அனுசரனையோடும் உற்சாகமாக பணியாற்றிடுமாறு தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கத்தார் மண்டல MKP யின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணைச்செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் பேசினார்.

இந்நிகழ்வில், கத்தார் மண்டலச் செயலாளர் தைக்கால் சகாபுதீன், பொருளாளர் மஞ்சகொல்லை ஃபார்மானுல்லாஹ், துணைச்செயலாளர்கள் சிதம்பரம் நூர் முகம்மது, திருச்சி நசீர் பாஷா, பரங்கிப்பேட்டை ஃபாரூக் மற்றும் நிர்வாக குழு நிர்வாகிகளான முஹம்மது உவைஸ், அப்துல் ராஜ்ஜாக், அப்துல் ஃபத்தாஹ், சுபைர், இக்பால், முன்னாள் துஹைல் மாநகர பொருளாளர் அத்திக்கடை பாரூக் மற்றும் தாயக நிர்வாகிகளும், துபாய், குவைத் நிர்வாகிகளும், சகோதர அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் திருப்பத்தூர் நிசார் அஹமத் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தகவல் ;
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKPitWING
#கத்தார்_மண்டலம்.
28/05/2020