வீட்டு வாடகை மற்றும் தவணை கட்டணத்தை செலுத்த வற்புறுத்தக்கூடாது! மஜக பொதுச் செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

தமிழகத்தில் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற சுய உதவிக் குழுக்களை மாதத் தவணையை செலுத்திடுமாறு அந்நிறுவனங்கள் வற்புறுத்துவதாக தெரிகிறது.

கொரணா காரணமாக அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்திர தவணை தொகையை கட்ட வற்புறுத்தக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதை தனியார் நிதி நிறுவனங்கள் மீறுவது கண்டிக்கத்தக்கது.

அது போல் பொதுவாக வருமான இழப்பு பலருக்கும் ஏற்பட்டுள்ள நிலையில், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்காரர்களிடம் வாடகை கேட்டு வற்புறுத்தக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இதுவும் மீறப்படுகிறது. இது கனிவு காட்ட வேண்டிய ஒரு மனிதாபிமான பிரச்சனையாகும்.

இவற்றை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இப்பிரச்சனைகளை கனிவுடன் அணுக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
30.05.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*