கத்தாரில்_சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட MKP நிர்வாகிகள்

தோஹா.மே.28.,

கத்தாரில் நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் வேலைதேடி வந்த இடத்தில் ஏஜன்டால் ஏமாற்றபட்டு தனது ஸ்பான்ஸரும் கைவிட்ட நிலையில் ஓரு வாரமாக சரியாக உணவின்றி, தங்க இடமின்றி தவித்து வந்தனர்.

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் மற்றும் மஜக அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல துணைச் செயலாளர் கஃதீர் ஆகியோர் கைவிடப்பட்ட நபர்கள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து.

உடனே அந்த 5 நபர்களையும் இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் சென்று முறையாக புகார் அளித்துவிட்டு தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர் மேலும் அவர்கள் தாயகம் செல்லும் வரை உணவு மற்றும் தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

நெல்லை அப்துல் அஜீஸ் உடனிருந்தார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
29.5.2020