சென்னை.மார்ச்.14., மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில். தமிழக அரசு சார்பாக இன்று மாலை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் கட்சிகள் மற்றும் அமைப்பினரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அவைத்தலைவர் நாசர் உமரி தலைமையில் துணைப் பொதுச் செயலாளர்கள் சுல்தான் அமீர் மற்றும் N.A.தைமிய்யா ஆகியோர் பங்கேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றுவதே அமைதிக்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்தினார்கள். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING, #சென்னை. 14-03-2020
Month:
நாகையில் ஆசாதி முழக்கம்! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி முழங்கி எழுச்சியுரை!
மார்ச்.14, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டம் மற்றும் இறுதி நாளான நேற்று மஜக சார்பில் அவைத் தலைவர் எஸ்.எஸ் நாசர் உமரி அவர்கள் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து ஆசாதி முழக்கங்களை எழுப்பி போராட்டக் களத்தில் எழுச்சியை ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து சிறார்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், நாகை நகர செயலாளர் அஜீஜூர் ரஹ்மான், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகை நிர்வாகிகள் அப்துல், செமீர்தீன், அனாப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம். 13/03/2020
முத்துப்பேட்டை ஷாகின்பாக் போராட்டத்தில், மன்னை செல்லச்சாமி பங்கேற்றுகண்டன உரை!
மார்ச்.14, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார். இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர், பேராவூரணி சலாம், முத்துப்பேட்டை நகர செயலாளர் பால்கார மைதீன், நகர பொருளாளர் பஷீர், அதிரை ஹக், யாசீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING | #முத்துப்பேட்டை_பேரூர். #திருவாரூர்_மாவட்டம். 13/03/2020
பண்ருட்டி தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை!
மார்ச் 14, கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர் பண்ருட்டி யாசின், ஒன்றிய செயலாளர் ரஹீம், நெய்வேலி நகர செயலாளர் நூர் முகம்மது உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம். 13/03/2020
கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்…! மஜக துணைபொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!
சென்னை.மார்ச்.14., தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை மக்கா பள்ளிவாசலில் ஜமாத்துல் உலமா தலைவர் காஜா முயினுதீன் பாகவி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மஜக துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மஜக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர் தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 14-03-2020