கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்…! மஜக துணைபொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!

சென்னை.மார்ச்.14.,

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை மக்கா பள்ளிவாசலில் ஜமாத்துல் உலமா தலைவர் காஜா முயினுதீன் பாகவி தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் மஜக துணை பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மஜக மாநில துணைச்செயலாளர் ஷமீம் அஹமது, மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர்

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
14-03-2020