நாகையில் ஆசாதி முழக்கம்! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி முழங்கி எழுச்சியுரை!

மார்ச்.14,
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது.

ஐந்தாம் நாள் போராட்டம் மற்றும் இறுதி நாளான நேற்று மஜக சார்பில் அவைத் தலைவர் எஸ்.எஸ் நாசர் உமரி அவர்கள் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து ஆசாதி முழக்கங்களை எழுப்பி போராட்டக் களத்தில் எழுச்சியை ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து சிறார்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், நாகை நகர செயலாளர் அஜீஜூர் ரஹ்மான், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகை நிர்வாகிகள் அப்துல், செமீர்தீன், அனாப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.
13/03/2020