
மார்ச்.14,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.
மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.
இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தலைமை செயற்குழு உறுப்பினர், பேராவூரணி சலாம், முத்துப்பேட்டை நகர செயலாளர் பால்கார மைதீன், நகர பொருளாளர் பஷீர், அதிரை ஹக், யாசீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING | #முத்துப்பேட்டை_பேரூர்.
#திருவாரூர்_மாவட்டம்.
13/03/2020