சிவகங்கை.ஜன.22, சிவகங்கை மாவட்டம் ஐக்கிய ஜமாத், உலமா சபை & அமைப்புகள் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி & பொதுக்கூட்டம் காலை-10 மணியளவில் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில், தற்போது நடைபெறும் போராட்டங்களை உலமாக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். முதலாம் சுதந்திர போராட்டத்தில் உலமாக்களின் பங்களிப்பால் எப்படி போராட்டம் வீரியம் அடைந்ததோ, அதேபோல் தற்போது இரண்டாம் சுதந்திர போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். முஸ்லிம்களை பொருத்தவரைக்கும் தேசிய கொடியை கையில் ஏந்தினால் சுதந்திரத்தை பெறாமல் கொடியை கீழே இறக்கமாட்டார்கள் என்று கூறினார். இந்நிகழ்வுகளில், வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது சேட், சிவகங்கை மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், பசீர், சிவகங்கை நகரச் செயலாளர் ஷேக் பக்ருதின், நகர பொருளாளர் அல்லாஹ் பிச்சை
Month:
நெய்வேலியில் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு விளக்கப் பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டனஉரை..!!
ஜன.22, நெய்வேலியில் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கிய விளக்க பொதுக்கூட்டம் அண்ணாதிடலில் ஹாஜி.சா.சுல்தான் முகைய்தீன் தலைமையில் எழுச்சியோடு நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கெதிராக எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் தனது உரையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதங்களை கடந்த நல்லிணக்கத்தோடு நடைப்பெறும் சம்பவங்களை பட்டியலிட்டவர், மதங்களை கடந்து குடியுரிமை சட்டத்திற்கெதிரான போராட்டத்தை மக்கள் நடத்தி வருவதாகவும், அவ்வகையில் நாமும் இப்போராட்டத்தை எவ்வித சாயமும் இன்றி பாதிக்கப்படும் இந்திய மக்களுக்காக நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்து இப்போராட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், தி.வேல்முருகன், ஹாஜாகனி, சிந்தனைச்செல்வன், சர்புதீன்ஷெரீப் உள்ளிட்ட தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிட நெய்வேலி இபுராஹிம் ஒருங்கிணைக்க ஹாஜி.M.அப்துல் ரஹீம் நன்றிக் கூறினார். இதில், மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இபுராஹிம், மாவட்ட துணைச் செயலாளர்கள் யாசின், ரியாஸ் ரகுமான், சலீம், நெய்வேலி டவுன் ஷிப் செயலாளர் ரியாஸ் மற்றும் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட அணி, ஒன்றிய, நகர, கிளை
குடியுரிமை கறுப்புசட்டங்களுக்கு எதிராக தொடர்கிறது அறப்போராட்டம்..! காவலர்வில்சனுக்கு மவுனஅஞ்சலி செலுத்தி உருக்கம்!
ஜனவரி-21, வேதாரண்யத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு எழுந்து முழங்கினர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் திரண்டதால் முக்கிய வீதிகள் ஸ்தம்பித்தன. போக்குவரத்து வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இதில் பல்வேறு சமுதாய மக்களும், ஆர்வத்தோடு திரண்டது வேதாரண்ய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வேதாரண்யம் வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சமூக நீதி அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சாதி சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேராதரவை வழங்கினர். வயதானவர்களும் ஆர்வத்தோடு திரண்டதால் அவர்களுக்கு நாற்காலி வசதிகள் செய்யப்பட்டது. பெண்கள் வரிசையே நீண்டு திரண்டது பெரும் எழுச்சியாக இருந்தது. பள்ளிக்கூடங்களிலிருந்து 3 மணிக்கே மாணவர்கள் வெளியேறி போராட்ட களத்திற்கு வந்தனர். பெற்றோர்கள் பள்ளி கூடத்திற்கு போன் செய்து பிள்ளைகளை பள்ளி கூடத்திலிருந்து வரவழைத்தது ஒரு திருப்பு முனையாகும். கூட்டத்தை கட்டிடங்களின் மேல் நின்றவாறு முகநூல் கூட்டம் நேரலையில் ஒளிபரப்பு செய்த வண்ணம் இருந்தது.. கூட்டத்தில் எங்கும் தேசிய கொடி மயமாக இருந்தது. அது உணர்ச்சிகரமாகவும் இருந்தது. மருத்துவ சேவை குழு, ஆம்புலன்ஸ்கள் யாவும் தயார் நிலையில் இருக்க, ஆயிரக் கணக்கான
கூத்தாநல்லூரில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம்! எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டன உரை..
ஜன.21, கூத்தாநல்லூரில் கூட்டமைப்பு சார்பில் இம்தாதுல் முஸ்லிமீன் சபை நடத்திய குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு விளக்க கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில், 'இந்த சட்டத்திற்கு எதிராக இன்று உலமாக்களும் அரசியல் கட்சி இயக்கங்களுடைய தலைவர்களும் ஒரே அணியில் நிற்கிறார்கள் யாராவது கணக்கெடுப்பு நடத்த வந்தால் அந்தத் தலைவர்களின் உத்தரவுபடி செயல்படுங்கள் தலைவர்களின் உத்தரவு இல்லாமல் தங்களுடைய விபரங்களை வழங்க வேண்டாம்' என்று கோரிக்கை வைத்தார். இந்நிகழ்வுகளில், மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் சாகுல், ஜெய்னுல்லாபுதின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 20/01/2020
சிவகாசியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..! மன்னைசெல்லச்சாமி பங்கேற்பு
விருதுநகர்.ஜன.20.., சிவகாசி வட்டார அனைத்து ஜமாத், கட்சி மற்றும் இயக்கங்களின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சிவகாசி பாவடித்தோப்பு திடலில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நேற்று (19-01-2020) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோத சட்டங்களை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கண்மணி காதர் தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #விருதுநகர்_மாவட்டம் 19-01-2020