குடியுரிமை கறுப்புசட்டங்களுக்கு எதிராக தொடர்கிறது அறப்போராட்டம்..! காவலர்வில்சனுக்கு மவுனஅஞ்சலி செலுத்தி உருக்கம்!


ஜனவரி-21,

வேதாரண்யத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு எழுந்து முழங்கினர்.

நூற்றுக்கணக்கான வாகனங்களில் மக்கள் திரண்டதால் முக்கிய வீதிகள் ஸ்தம்பித்தன. போக்குவரத்து வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது.

இதில் பல்வேறு சமுதாய மக்களும், ஆர்வத்தோடு திரண்டது வேதாரண்ய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வேதாரண்யம் வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், விவசாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், சமூக நீதி அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சாதி சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று பேராதரவை வழங்கினர்.

வயதானவர்களும் ஆர்வத்தோடு திரண்டதால் அவர்களுக்கு நாற்காலி வசதிகள் செய்யப்பட்டது.

பெண்கள் வரிசையே நீண்டு திரண்டது பெரும் எழுச்சியாக இருந்தது.

பள்ளிக்கூடங்களிலிருந்து 3 மணிக்கே மாணவர்கள் வெளியேறி போராட்ட களத்திற்கு வந்தனர்.

பெற்றோர்கள் பள்ளி கூடத்திற்கு போன் செய்து பிள்ளைகளை பள்ளி கூடத்திலிருந்து வரவழைத்தது ஒரு திருப்பு முனையாகும்.

கூட்டத்தை கட்டிடங்களின் மேல் நின்றவாறு முகநூல் கூட்டம் நேரலையில் ஒளிபரப்பு செய்த வண்ணம் இருந்தது..

கூட்டத்தில் எங்கும் தேசிய கொடி மயமாக இருந்தது. அது உணர்ச்சிகரமாகவும் இருந்தது.

மருத்துவ சேவை குழு, ஆம்புலன்ஸ்கள் யாவும் தயார் நிலையில் இருக்க, ஆயிரக் கணக்கான தண்ணீர் குடுவைகள் விநியோகிக்கப்பட்டன.

கூட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக மாணவர் இந்தியா குழுவினர் கலை வடிவ போர் முழக்கங்களை எழுப்பி மக்களை உசுப்பினர். மொத்தக்கூட்டமும் கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்தியது.

தலைவர்களின் பேச்சுகள் நாகரீகமாக இருக்க, கோஷங்களும் யாரையும் காயப்படுத்தாவண்ணம் கண்ணியமாக இருந்தது.

இதை தமிழகத்தில் செயல்படும் பிற போராட்ட குழுக்களும் பின்பற்ற வேண்டியது அவசியம் என்ற அளவில் முழக்கங்கள் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., நிறைவுரையாற்றும் போது, மோடியும், அமித் ஷாவும் மத நல்லிணக்கத்தை, அமைதியை சீர்குலைக்க நினைக்கிறார்கள். அதை எல்லா சமூக மக்களோடும் இணைந்து முறியடிப்போம் என சூளுரைத்தார்.

முன்னதாக அவர் பேசும்போது, களியக்காவிளையில் மாஃபியாக்களால் கொல்லப்பட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு கூற, பல்லாயிரக்கனக்கான மக்கள் உருக்கமுடன் மவுன மரியாதை செய்தனர்.

இதை கண்டு பல போலீஸ்காரர்கள் கண்கலங்கி நன்றி கூறினர்.

போராட்டம் முடிந்ததும் தொண்டர் அணியினர் குப்பைகளை அவர்களே முன்னின்று அகற்றியது குறிப்பிடத்தக்கது.

இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் திரு.ரமணி, P.V.ராஜேந்திரன் Ex.MP, அய்யா தர்மயுக பேரவை நிறுவனத் தலைவர் சுவாமி.P. பாலமுருகன், மா.மீனாட்சி சுந்தரம் Ex MLA, ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும்,காமராஜ் Ex MLA, நிஜாம் Ex MLA, வணிகர் சங்க பிரமுகர் தென்னரசு, LSE பழனியப்பன், கவிஞர் மாசி, பெரியப்பள்ளி இமாம் சாகுல் ஹமீது ஆகியோரும் உரையாற்றினர்.

நாகை சந்திரமோகன், விவசாய அமைப்புகளை சேர்ந்த பார்த்தசாரதி, திருநாவுக்கரசு, இலக்கிய அமைப்புகளை சேர்ந்த புயல்.குமார் போன்ற பிரபலங்களும் வருகை தந்திருந்தனர்.

தோப்புத்துறை ஜமாத் தலைவர் ஷேக், முன்னாள் ஜமாத் தலைவர்கள் KM KI நவாஸ்தீன், ஜபருல்லாஹ், SM ஜெய்னுதீன், Z கமால் மற்றும் சுபஹானி, ஆகியோருடன் பல்வேறு சமூகங்களை சேர்ந்த சுற்று வட்டார கிராம பஞ்சாயத்து பிரமுகர்கள் என மத நல்லிணக்க சங்கமமாக இந்நிகழ்வு அமைந்தது.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில பொருளாளர் ஹமீது ஜெஹபர், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹ்மது, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, துணைச் செயலாளர்கள் அஹமதுல்லா, கண்ணு வாப்பா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினரும் திரளாக பங்கேற்றனர்.

கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பொது பெயரில் அனைத்து மக்களையும் களத்தில் ஒருங்கிணைத்த போராட்ட குழு பாராட்டுக்குரியது.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.