சிவகங்கையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்..! எஸ்எஸ்ஹாரூன்ரசீதுகண்டனஉரை..!!


சிவகங்கை.ஜன.22,

சிவகங்கை மாவட்டம் ஐக்கிய ஜமாத், உலமா சபை & அமைப்புகள் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி & பொதுக்கூட்டம் காலை-10 மணியளவில் நடைபெற்றது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் எழுச்சிமிகு கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில், தற்போது நடைபெறும் போராட்டங்களை உலமாக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். முதலாம் சுதந்திர போராட்டத்தில் உலமாக்களின் பங்களிப்பால் எப்படி போராட்டம் வீரியம் அடைந்ததோ, அதேபோல் தற்போது இரண்டாம் சுதந்திர போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். முஸ்லிம்களை பொருத்தவரைக்கும் தேசிய கொடியை கையில் ஏந்தினால் சுதந்திரத்தை பெறாமல் கொடியை கீழே இறக்கமாட்டார்கள் என்று கூறினார்.

இந்நிகழ்வுகளில், வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஷாகுல் ஹமீது சேட், சிவகங்கை மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், பசீர், சிவகங்கை நகரச் செயலாளர் ஷேக் பக்ருதின், நகர பொருளாளர் அல்லாஹ் பிச்சை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்.
21/01/2020