தமிழ்நாடு மீனவர் சங்க பொதுச் செயலாளர் தாஜ்தீன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்வு மல்லப்பட்டினத்தில் நடைப்பெற்றது.
இதில் தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் இரா.அன்பழகனார், அப்துல்ரஹ்மான் Ex.MP, து.கிருஷ்ணசாமி வாண்டையார், தம்பிக்கோட்டை நிலக்கிழார் எம்.கே.எஸ்.செந்தில் குமார், பண்ண வயல் நிலக்கிழார் எஸ்.ராஜா தம்பி சேர்வை
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், மீனவர்களின் நலன்களுக்காக தான் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை குறிப்பிட்டார்.
பிறகு, குடியுரிமை கறுப்பு சட்டங்கள் தொடர்பாக பேசியவர். NRC போன்ற சட்டங்களால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கான இந்துக்களின் குடியுரிமை பறிபோய் இருப்பதாக கூறியவர். இது நாடு முழுக்க அமுலானால் எல்லா சமூக மக்களும் பாதிப்படைவார்கள் என்றும், எனவே தான் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவாக முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.
அதனால் தான் நாள்தோறும் எல்லா சமூக மக்களின் ஆதரவும் பெருகி வருவதாக கூறியவர். நாட்டுக்கு தொழிற்சாலைகள், நல்லகல்வி கூடங்கள், தரமான மருத்துவமனைகள், அகன்ற சாலை போன்றவை தான் தேவை என்றார். இது போன்ற பிரிவினைகளை, குழப்பங்களை ஏற்படுத்தும் சட்டங்கள் தேவையில்லை என்பதே மக்களின் எண்ணமாகும் என்றும் இடித்துரைத்தார்.
இந்நிகழ்வில், மாநில செயலாளர் நாச்சிக்குளம்.தாஜூதீன், மஜக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சைதெற்குமாவட்டம்.