#மேட்டுப்பாளையத்தில் மஜக பொருளாளர் எஸ்எஸ் ஹாருண்ரஷீது சூளுரை!! ஜனவரி.10., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களான CAA, NRC -க்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் எழுச்சியால் அமைதி வழியில் போராட்டங்கள் பேரணிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது CAA, NRC போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் மேலும் வீரியமடைய வேண்டும் என்று கூறினார், மேலும், அவர் பேசும் போது அம்பேத்கரின் அரசியல் சாசனங்களை அழித்து பாஜக கொண்டு வந்துள்ள இந்த கருப்புச் சட்டங்களை நாட்டை விரட்டியடிக்க வேண்டும் என்றும் NPR. NRC.போன்ற விவரங்களை கேட்டு நம்முடைய பகுதிகளுக்குள் யார் வந்தாலும் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் அனைத்து ஜமாத், கட்சிகள், மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பெரும் திரளான ஆண்களும் பெண்களும்
Month:
“போருக்கு எதிராக” பதாகையுடன் சட்டமன்றத்திற்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA
இன்று (09-01-2020) தமிழக சட்டமன்றத்திற்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் "அமெரிக்காவே... மத்திய கிழக்கில் போரை தூண்டதே.. உலக அமைதியை குலைக்காதே..." என்ற வாசகங்களை ஏந்தி வருகை தந்தார். ஈரான் மீதான அமெரிக்காவின் போர் வெறியை கண்டித்தும், உலக அமைதியை வலியுறுத்தியும் இவ்வாறு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 09-01-2020
மத்தியஅரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் சாலைமறியல் போராட்டம்!!
கோவை:ஜன.08., மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகமது அப்சல், தலைமையில் மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், மஜக மாவட்ட செயலாளர் ஜாபர், மாவட்ட பொருளாளர் ரபிதீன், மாநில செயற்குழு உறுப்பினர் காஜா மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் R.யாசர் அரபாத் s.உமர் அப்பாஸ், நகர இளைஞரணி, செயலாளர் கோகுல், காசிம், நவ்ஃபல், சதாம் உசேன், நவ்ஷாத், ஷேக் மைதீன், SR.ஷேக் மைதீன், ஜெபராஜ், காஜா, வேலுச்சாமி, மற்றும் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைவடக்குமாவட்டம் 08.01.2020
மத்தியஅரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து கோவையில் போராட்டம் : மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் பங்கேற்பு
கோவை:ஜன.08., மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்ச்சங்கம் MJTS புதிய பாதை ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் சாஜஹான், துணை செயலாளர்கள் உசேன், காதர், அன்சர்,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொன்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 08.01.2020
சட்டப்பேரவையில் முதமிமுன்அன்சாரி மற்றும் கருணாஸ் வெளிநடப்பு..!
சென்னை.ஜனவரி.06 இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், கேரளாவைப் போல, குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று முக்கிய கட்சிகள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தன. இது குறித்து தான் கொண்டு வந்த அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்று அவையில் எடுத்து கொள்ள வேண்டும் என சபாநாயகரிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வாதிட்டார். சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அதை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் வெளிநடப்பு செய்தார். திமுக, காங்கிரஸ், IUML உறுப்பினர்களும் இதே கோரிக்கைக்காக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 07-01-2020