டிச.30., தென்காசியில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் CAA ,NRC குடியுரிமைச் சட்ட விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, கம்யூனிஸ்ட் கட்சி தோழர் கனகராஜ், பேராசிரியர் சுந்தரவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தென்காசி மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர் மைதீன் , மாவட்ட பொருளாளர் M.S முஹம்மது இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சங்கை பீர் மைதீன் , அச்சம் புதூர் நகர செயலாளர் முஹமது நாசர், நகர பொருளாளர் கமாலுதீன், மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல். #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 29.12.19
Month:
இந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைத்த மோடிக்கு நன்றி..! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
சென்னை மண்ணடியில் JAQH அமைப்பின் சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது "மோடி மதத்தால் மக்களை பிரிக்க நினைத்தார். இப்போது அவர் கொண்டு வந்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், தலித்துகளும் இணைந்து போராடுகிறார்கள். எங்களை இணைத்த மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என்றார். JAQH அமைப்பின் இம்முயற்சியை பாராட்டிய அவர், தற்போது மஸாயீல், சிந்தாந்த பேதங்களை முன்னிறுத்தாமல், சுன்னத், தவ்ஹீத், தப்லீக், என பேதம் பார்க்காமல் எல்லோரும் ஓரணியில் இணைவதை பாராட்டினார். மேலும் இது குறித்து தற்போது ஷியா ஜமாத்தோடும் தான் பேசி வருவதாகவும் கூறினார். தொடர்ந்து தேவர், வன்னியர், நாடார், தலித், யாதவர் உள்ளிட்ட பிற சமூக தலைவர்களோடும் பேசி வருவதாகவும், இந்த நாட்டின் பன்முக கலாச்சாரம், பொது ஒற்றுமையை காக்க எல்லோரும் ஒன்று பட்டு போராடுவதே காலத்தின் விருப்பம் என்றும் கூறினார். இதில் JAQH அமைப்பின் பொதுச் செயலாளர் நூர் முகம்மது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி
மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகர நிர்வாக ஆலோசனை கூட்டம்!
டிச.28, மனிதநேய கலாச்சார பேரவையின் துபாய் மாநகர நிர்வாகிகள் கூட்டம் MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும், அமீரக கொள்கைப்பரப்பு செயலாளர் Y.அப்துல்ரஜாக் அவர்கள் முன்னிலையில் அமீரக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமீரக செயலாளர் ஒப்புதலின் பேரில் எதிர்வரும் 2020 வருடத்திற்கான துபாய் மாநகர நிர்வாகிகளாக, துபாய் மாநகர செயலாளர்: V.ஷபீக்குர் ரஹ்மான் பொருளாளர்: Y.பையாஜ் அஹமது துணைச் செயலாளர்கள்: A.சித்திக், ஹம்தான், K.M.அஸாருதின், Y.சலீம், செயற்குழு உறுப்பினர்கள் : 1.ஆசிக் 2.ரியாஹ் அஹமது 3.மர்ஜுக் 4.சையது இப்ராஹிம். 5.அர்ஸாத் அஹமது 6.G.கோகுல் 7.ஜாசிம் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்: N.சபீர் அகமது உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வாகியுள்ளனர். அமீரக செயலாளர் பேசும் போது, துபாய் மாநகர செயலாளராக B.ரஹமத்துல்லா அவர்களின் கடந்த இரண்டாண்டு செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் படி இருந்ததாகவும், புதிய பணி நிமித்தமாக அபுதாபி செல்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன் புதிய நிர்வாகமும் அதைப் போல் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், அமீரக மற்றும் துபாய் மாநகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தகவல்: #மனிதநேயகலாச்சாரபேரவை #தகவல்தொழில்நுட்பஅணி #MKP_IT_WING | #துபாய்_மாநகரம். 27/12/2019
குடியுரிமை சட்டத் திருத்தத்தை திருத்தம் செய்யக் கோரி திருச்சியில் தர்ணா போராட்டம்!!
திருச்சி:டிச.27., திருச்சி மாவட்ட அனைத்து கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திருத்தம் செய்யக்கோரி தர்ணா போராட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் மஜக-வின் சார்பாக பேராசிரியர் மைதீன், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மஜக மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஷா, அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி, அவர்கள் தலைமையில் மஜக வின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் உட்பட திரளானோர் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவல்: #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருச்சி_மாவட்டம் 27.12.19
திண்டிவனத்தில் குரியுரிமை சட்டத்திற்கு எதிரான எழுச்சிமிகு போராட்டம் : இபுராஹீம் பங்கேற்பு
#மஜகமாநிலதுணைசெயலாளர்நெய்வேலிஇபுராஹீம்பங்கேற்பு! டிச.25, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து வட்டார ஜமாத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச.24) நடைப்பெற்றது. எழுச்சியோடு நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹீம் கண்டன உரையாற்றினார். இதில், மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் J.முஹம்மது ரிஸ்வான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் S.D.சையத்உசேன், திண்டிவனம் நகர செயலாளர் M.தமிமுன்அன்சாரி, துணை செயலாளர் M.சையத்அபுதாஹீர் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.