#போராட்டத்தில்இந்துசகோதரசகோதரிகள்பங்கேற்பு!! மேட்டுப்பாளையம் டிச.31.,பாரபட்ச முறையில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய அளவில் ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், அதை தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 15திற்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் #NO_CAA #NO_NRC என கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதில் அப்பகுதிகளில் உள்ள இந்து சகோதரிகளும், தாய்மார்களும், இணைந்து கோலமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இது போன்று எழுதக்கூடாது என தெரிவித்தனர் பிறகு மஜக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேசி கோலப்போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் EMS. ரபிதீன், மற்றும் நிர்வாகிகள் ஆரிப், அப்பாஸ், கோகுல், நவ்ஃபல், காசிம், பாசித், ரகுமான், நந்தகுமார், காஜா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைவடக்குமாவட்டம் 31.12.19
Month:
முப்படைகளுக்கும் ஒரே தலைமை பதவி, இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல : முதமிமுன் அன்சாரி MLA
#மஜக பொதுச்செயலாளர் அறிக்கை..!!! இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தலைமை தளபதி தான் செயல்படுவார் என தீர்மானித்து, அதன் படி பிபின் ராவத் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இதுவரை முப்படைகளின் தலைமை பொறுப்பு குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. நம் நாட்டில் ராணுவ புரட்சி நிகழ்ந்து விட கூடாது என்ற தூர நோக்கு சிந்தனையோடு அந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, அன்றைய ராணுவ தளபதியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் ராணுவ கிளர்ச்சிகள் நடைப்பெற்று அங்கெல்லாம் அரசுகள் மாறுதல்களுக்கு உள்ளாகி வந்தன. அந்த நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், முப்படைகளும் ஒருவரின் கையில் இருந்தால் அது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறி முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகளை நியமித்து, அவற்றை குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு அன்றைய பிரதமர் நேருவுக்கு ஆலோசனை கூறினார். அதுவே சிறந்த யோசனை என ஏற்று அப்படியே நேரு அவர்கள் அதை செயல்படுத்தினார். இந்த பின்னணிகளையெல்லாம் மறந்து விட்டு, இன்று முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தளபதி என
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சங்கராபுரத்தில் மக்கள் எழுச்சி..!! எஸ்எஸ்ஹாரூன்ரசீது கண்டன உரை
கள்ளக்குறிச்சி.டிசம்பர்.30., குடியுரிமை திருத்த சட்டத்தினை கண்டித்தும், அதை திரும்ப பெறக்கோரியும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளிளும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று (30.12.2019) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் CAA-விற்கு எதிரான கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com., அவர்கள் கலந்து கொண்டார். இதில் பேசிய பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தி இந்தியா முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை மக்கள் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் மக்கள் இரண்டாம் சுதந்திர போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், #RSS- காரர்களுக்கு தேசியக்கொடி பிடிக்காது RSS- காரர்கள் அவர்களுடைய அலுவலகத்தில் என்றாவது சுதந்திர தினத்தில் தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார்களா.? பாரதிய ஜனநாயக கட்சிக்கும், அமித்ஷாவுக்கும் தேசியக்கொடி பிடிக்காது. ஏனென்றால் தேசியக் கொடியின் மூன்று வண்ணமும் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஒற்றுமையை உணர்த்துகிறது என்பதால்.. எனவே, மக்களை மத ரீதியாக பிரிக்க நினைக்கும் சங்பரிவாரின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என்றார். இதில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி MLA தா.உதயசூரியன்,
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம், மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கைது.!
திருப்பூர்.டிசம்பர்:30 பாரபட்ச முறையில் மத்திய அரசு கொண்டுவந்த மக்கள் விரோத குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய அளவில் ஒட்டுமொத்த மக்களும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர், அதன் தொடர்ச்சியாக நேற்று தமிழக தலைநகர் சென்னை பெசண்ட்நகரில் மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, கல்லூரி மாணவிகள் #NO_CAA #NO_NRC என கோலமிட்டு அற வழியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை பொறுத்துக்கொள்ளாத காவல்துறையினர் அந்த மாணவிகளை கைது செய்தனர். காவல்துறையின் இந்த கைது நடவடிக்கையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மக்கள் கண்டித்து வந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட அவசர ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் ஹைதர்அலி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று சென்னையில் நடந்த மாணவிகள் கைது செய்யப்பட்டது குறித்து விவாதிக்கபட்டு போராட்டத்தை வேறு வடிவத்துக்கு கொண்டுசென்ற மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அதே வடிவிலான எதிர்ப்பாக சாலையில் #NO_CAA #NO_NRC எழுதும் போராட்டத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்தினர், இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சாலையில் #NO_CAA #NO_NRC என எழுதி கொண்டிருந்த மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்தனர். இந்த
கத்தார் QISF விழிப்புணர்வு நிகழ்ச்சியில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!
தோஹா.டிசம்பர்.29., கத்தார் மன்சூரா பகுதியில் QISF தமிழக பிரிவு சார்பாக "புதிய சட்டத்திருத்தங்களும், பறிக்கப்படும் உரிமைகளும்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) மண்டலச் செயலாளர் கீழக்கரை முஹம்மது ஹூசைன் தலைமையில் MKP மண்டல, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் MKP சார்பில் திருப்பத்தூர் நிஸார் CAA, NRC போன்ற சட்டங்களால் நடக்கும் அநீதிகளை எடுத்துரைத்தார், அதைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அப்துல் ரஜ்ஜாக் பாசிச சித்தாந்தத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து கருத்துரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்நாடு PFI-யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ இலியாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். தாயகத்தை போல இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக QMF, IQIC, QITC, ஆயங்குடி ஜமாத் மற்றும் இதர அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை QISF நிர்வாகி சகோதர் ரிஸ்வான் தலைமையில் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். தகவல்;- #MKP_IT_WING #மனிதநேயகலாச்சாரபேரவை. #கத்தார்_மண்டலம் 27/12/2019