SIO மாணவர் தேர்தல் அறிக்கை! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களை நேரில் சந்தித்து வழங்கினர்.!


சென்னை.மார்ச்.2.,

SIO மாணவர் அமைப்பு சார்பாக ஒவ்வொரு தேர்தலிலும் மாணவர் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மாணவர் தேர்தல் அறிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்களிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.

எஸ்.ஐ.ஓ அமைப்பின் பணிகளை மனமார்ந்து பாராட்டி மேலும் தொடர்ந்து களமாட வாழ்த்தினார்.

உடன் அவைத்தலைவர் நாசர் உமரி மற்றும் இளைஞரணி செயலாளர் அஸாருதீன் ஆகியோர் உடனிருந்தார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
02-03-2021