மஜக திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்.! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!


திருப்பூர்.மார்ச்;04

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணைப் பொதுச் செயலாளர் சையது அகமது பாருக், மாநில துணைச் செயலாளர் கோவை அப்துல் பஷீர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொறுப்புக்குழு உறுப்பினர் முஸ்தாக் அஹமது, அவர்கள் வரவேற்புரையாற்றினார், பொறுப்புக் குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்.

நிகழ்வில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், சட்டமன்ற தேர்தல் குறித்தும், நிர்வாகிகள் மத்தியில் தலைமை நிர்வாகிகள் உரையாற்றினர்.

கூட்டத்தின் இறுதியில் பொறுப்புக்குழு கலைக்கப்பட்டு வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

நிகழ்வில்
காங்கேயம், மங்கலம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், நகர நிர்வாகிகள், மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
02-03-2021