திண்டிவனத்தில் குரியுரிமை சட்டத்திற்கு எதிரான எழுச்சிமிகு போராட்டம் : இபுராஹீம் பங்கேற்பு

#மஜகமாநிலதுணைசெயலாளர்நெய்வேலிஇபுராஹீம்பங்கேற்பு!

டிச.25,
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து வட்டார ஜமாத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச.24) நடைப்பெற்றது.

எழுச்சியோடு நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹீம் கண்டன உரையாற்றினார்.

இதில், மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் J.முஹம்மது ரிஸ்வான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் S.D.சையத்உசேன், திண்டிவனம் நகர செயலாளர் M.தமிமுன்அன்சாரி, துணை செயலாளர் M.சையத்அபுதாஹீர் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விழுப்புரம்_மாவட்டம்.