மக்கள் கிளர்ச்சியை மடை மாற்ற குண்டு வைத்து திசை திருப்பவும் சதி செய்வார்கள். : முதமிமுன் அன்சாரி MLAஎச்சரிக்கை

சென்னை.டிசம்பர்.26..,

இன்று தலைநகர் சென்னையில் குடியுரிமை திருந்த சட்டத்திற்கு எதிரான பேரியக்கம் சார்பில் படைப்பாளிகள், பத்திரிக்கையாளர்கள், திரை-நாடக கலைஞர்கள், முற்போக்காளகள், சமுக செயல்பாட்டாளர்கள் பங்கேற்ற தமிழ் இசை முழக்க ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியோடு நடைப்பெற்றது.

பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருது தலைமையிலான தோழர்கள் களத்தை ஒருங்கிணைத்தார்கள்.

இயக்குனர்கள் கௌதமன், பா.ரஞ்சித் தொடங்கி பல திரைப் புள்ளிகளும், பாமரன் போன்ற எழுத்தாளர்களும், பன்னீர்செல்வம், லெனின் போன்ற பெரிய பத்திரிக்கையாளர்களும் குவிய தமிழ் இசை முழக்க போராட்டம் தொடங்கியது.

அரசியல் விமர்சன பாடல்கள், கானா பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நையாண்டி பாடல்கள் என அரசியல் நெடி பறக்க கலைஞர்களின் கூத்தாட்டம் சேப்பாக்கத்தை அதிர செய்தது.

சாமியான பந்தல் போட காவல்துறை தடை விதித்தது.

அதையும் மீறி சூரிய கிரகணம் என்றும் பாராமல், படைப்பாளிகள் கடும் வெயிலில் குழுமினர்.

நிகழ்வின் இடை, இடையே,

“போராடு… போராடு … உரிமைக்காக போராடு….”

“சண்டை செய்வோம்,
சண்டை செய்வோம்…
நீதிக்காக சண்டை செய்வோம்….”

என்பது போன்ற மக்கள் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் செயல்பாட்டாளர்கள் வருகை தந்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்வை தொடங்கி வைத்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசும் போது, பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில் போலீசே கலவரத்தை பரவல்படுத்தியதை சுட்டிக் காட்டினார்.

இங்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அயோத்தி குப்பம் மீனவ பகுதிகளில் போலீசே ஆட்டோக்களை உடைத்து தீ வைத்த காணொளி பதிவுகள் போல, அங்கும் நடந்துள்ளது என்றவர், முஸ்லிம்களின் வீடுகளுக்குள் நுழைந்து காவல்துறையை சேர்ந்த சிலர் நகைகளை கொள்ளையடித்து சென்றது கொடுமை என்றார்.

போராட்டத்தையும், நாடு தழுவிய மக்கள் கிளர்ச்சிகளை அவர்களால் அடக்க முடியவில்லை என்றவர், இதை திசை திருப்ப சதி நடக்கலாம் என்றார்.

எங்காவது குண்டுகளை திடிரென்று வெடிக்க செய்து விட்டு, அந்த பழியை போட்டு, மக்களின் உரிமை போராட்டங்களை திசை திருப்பவும் வாய்ப்புள்ளதாக, தாங்கள் சந்தேகப்படுவதாகவும், அஞ்சுவதாகவும் கூறியதை கூட்டம் தலையசைத்து ஆமோதித்தது.

அவர் பேசிவிட்டு வந்ததும், பல பத்திரிக்கை நண்பர்கள். “இந்த சந்தேகம் இப்போது எல்லோருக்கும் வந்து விட்டது, ஏனெனில் நாடு முழுக்க போராட்டங்கள் வெற்றிகரமாக நடப்பதை சிலரால் ஜுரணிக்க முடியவில்லை” என்றனர்.

மதியம்-2 மணி வரை கருத்தாளமிக்க பாடல்களுடன், தமிழ் இசைப்போருடன் நடைப்பெற்ற நிகழ்வில் தோழர். நல்லக்கண்ணு, கனிமொழி MP, திருமாவளவன் MP, தோழர் பாலகிருஷ்ணன், தி.வேல்முருகன், திருமுருகன் காந்தி, CPI மகேந்திரன் போன்ற அரசியல், செயல்பாட்டாளர்களும், தியாகு, வழக்கறிஞர் அருள்மொழி, சுந்தரவள்ளி, சல்மா, ஒவியா உள்ளிட்ட பல சமூக செயல்பாட்டார்களும், சிறுபான்மை சமூக பிரதிநிதிகளும் வருகை தந்து பங்கேற்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் 96 வயதிலும், நாட்டின் நலன் கருதி, கலைஞர்களை, படைப்பாளளிகளை ஊக்குவிக்க, தோழர் நல்லக்கண்ணு அவர்கள் களத்துக்கு வந்தது எல்லோரையும் வியக்க வைத்தது.

தமிழகத்தில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் நகரத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம்

26-12-2019