மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொருளாளராக. பஷீர் அஹமது த/பெ:- அப்துல் ஹமீது 14.ஆர்.வீ நகர் 2-வது தெரு ஒரத்தநாடு. 614625 தஞ்சை தெற்கு மாவட்டம் அலைபேசி: 9994203389 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 11-12-2019
Month:
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்தியாவின் பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட வரலாற்று அவமானம் மு தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்
இன்று நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் 5 ஆண்டுகள் தங்கியிருந்தால்,உரிய மூல ஆவணங்கள் இல்லாவிடினும்,அவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என புதிய சட்டம் கூறுகிறது. இதில் இந்து, பெளத்தர், சீக்கியர், ஜைன, கிரித்தவர் உள்ளிட்டோர் அடங்குவர் என கூறியிருப்பதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால் இதில் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி வலிமையாக எழுகிறது. பங்களாதேஷ் சுதந்திர நாடாக உருவானபோது அங்கு சென்ற வங்கம், அஸ்ஸாமி, பீகாரி, ஒரிய மொழி பேசும் முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் தாய் நாடு திரும்பினர். இப்போது அவர்களின் நிலை என்ன? அவர்கள் இந்திய முஸ்லிம்களாக பிறந்தது தான் குற்றமா? என்ற கேள்விகள் முக்கியமானவை. அது போல் இலங்கை தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் இந்திய குடியுரிமை கேட்டு வரும் போது, அவர்களும் புறக்கணிக்கப்பட்டிருப்பது யாரை திருப்திப்படுத்த? என கேட்கின்றோம். அமெரிக்கா போன்ற நாடுகளை பகைக்க கூடாது என்பதற்காக கிரித்தவர்களை அப்பட்டியலில்
மேட்டுப்பாளையம் சம்பவத்தை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்..! மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!
சென்னை.டிச.09.., மேட்டுப்பாளையத்தில் ஆதிக்க சுவர் இடிந்து விழுந்து 17-பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும், அதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், பெரியாரிய-தமிழின உணர்வாளர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஐயா.நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட விடுதலை கழகம் சார்பில் கொளத்தூர் மணி, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே-17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கு.ராமகிருஷ்ணன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, விசிக சார்பில் ஷாநவாஸ், விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் குடந்தை அரசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். சுவர் உரிமையாளர் மீது கொலை வழக்குகள் பதிய வேண்டும், நீதி கேட்டு போராடிய நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும், அராஜகம் செய்த ஈரோடு Sp, மேட்டுப்பாளையம் DSP, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது தீண்டாமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்
முஸ்லிம்பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இந்து சகோதரர்! :- மஜக இல்ல மணவிழாவில் நல்லிணக்கம்!
தஞ்சையில் இன்று மதிமுகவின் வளைகுடா அமைப்பாளர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோரின் சகோதரி நசீபா முனவராவுக்கும், மணமகன் சம்சுதீன் அவர்களுக்கும் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நடைப்பெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுக இலக்கிய அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் நிஜாமுதீன், தமிழக மக்கள் ஐனநாயக கட்சி தலைவர் KM ஷெரீப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பிறகு அமைச்சர் காமராஜ் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். இத்திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் உற்சாகப்படுத்தியது. மணமகள் குடும்பத்தினரான வல்லம் பஷீரும், வல்லம் ரியாசும் தந்தையை இழந்தவர்கள். அவர்களது குடும்பத்தை தந்தை ஷேக் தாவூதின் நண்பர் வடுவூர் ரவி அவர்கள் தன் குடும்பத்தோடு குடும்பமாக அன்புகாட்டி அரவணைத்து
சூடான் தீ விபத்தில் நாகை வாலிபர் மரணம் : மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!
டிச 8, சூடான் நாட்டில் ஏற்பட்ட கேஸ் டேங்கர் லாரி ஒன்று வெடித்த தீ விபத்தில், 3 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் கருகி இறந்துள்ளனர். அவர்களில் நாகை தொகுதி திட்டச்சேரி அருகில் உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற 25 வயது வாலிபரும் ஒருவர். முதலில் இவர் இறந்தாரா? காயமடைந்துள்ளாரா? என்று குழப்பம் நிலவியது. பிறகு அவரது துயர மரணம் உறுதி செய்யப்பட்டது. இன்று மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் , அவரது வீட்டிற்கு சென்று , பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு , அரசு வேலை பெற்று தர முயற்சி செய்வதாகவும், இது குறித்து முதல்வரிடம் பேசுவதாகவும் கூறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், இறந்த 3 தமிழர்கள் உட்பட அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் , வாய்ப்பு இருப்பின் இறந்தவர்களின் உடலை அவர்களது குடும்பத்தினரிடம் கொண்டு வந்த சேர்க்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தமிழக அரசு, இறந்த 3 தமிழர்களின் குடும்பத்திற்கும் , அரசு