அதிரை.அக்.30., அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ். அப்துல் சலாம் அவர்கள் தலைமையில் நகர அலுவலகத்தில் 29/10/2018 திங்கள்கிழமை மதியம் 1:30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் கலந்து கொண்டார். இந்தியாவின் கருப்பு நாள் பாபர் மசூதி இடிப்பு தினம் #டிசம்பர்_06 அன்று தஞ்சையில் இராணுவ விமான நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதிரையில் எதிர்கால கட்சியின் செயல்பாடு குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிரை பொறுப்பு குழு தலைவர் S.M.அப்துல் சமது, பொறுப்பு குழு து.தலைவர் M.முகம்மது யூசுப்,குவைத் மண்டலம் முன்னாள் து.செயலாளர் பைசல் அஹமது , அஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
Month:
சிறைவாசிகளின் வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுங்கள்!
"முத்தலாக் மசோதா " நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! சென்னை.அக்..23., சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று (22.10.2018) மாலை #அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் #அன்வர்_ராஜா_MP அவர்கள் #முத்தலாக் மசோதா தாக்கலின் போது பேசிய உரைகள் அடங்கிய நூலை புதுமடம். ஜாபர் அவர்கள் தொகுத்து, ஷா பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசியதாவது.... முத்தலாக் மசோதாவை மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது நாடே பதட்டமடைந்தது. மதச்சார்பின்மை கொள்கை கொண்ட கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தன. கடந்த டிசம்பர் 7 அன்று மாலை, தமிழக #முதல்வர் எடப்பாடியார் அவர்களை, அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நான் சந்தித்து, முத்தலாக் மசோதா குறித்து, தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைபாடு குறித்து ,மஜக நிர்வாக குழு வடிவமைத்த ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தேன். இவ்விஷயத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், இதில் சமரசம் கூடாது என்றும் வலியுறுத்தினேன். அம்மாவின் வழியில் ,இவ்விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று முதல்வர் கூறியதுடன், அதிமுக