சிறைவாசிகளின் வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுங்கள்!

“முத்தலாக் மசோதா ” நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

சென்னை.அக்..23., சென்னை கலைவாணர் அரங்கில், நேற்று (22.10.2018) மாலை #அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் #அன்வர்_ராஜா_MP அவர்கள் #முத்தலாக் மசோதா தாக்கலின் போது பேசிய உரைகள் அடங்கிய நூலை புதுமடம். ஜாபர் அவர்கள் தொகுத்து, ஷா பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழாவில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசியதாவது….

முத்தலாக் மசோதாவை மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது நாடே பதட்டமடைந்தது. மதச்சார்பின்மை கொள்கை கொண்ட கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தன.

கடந்த டிசம்பர் 7 அன்று மாலை, தமிழக #முதல்வர் எடப்பாடியார் அவர்களை, அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் நான் சந்தித்து, முத்தலாக் மசோதா குறித்து, தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைபாடு குறித்து ,மஜக நிர்வாக குழு வடிவமைத்த ஆலோசனைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தேன்.

இவ்விஷயத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், இதில் சமரசம் கூடாது என்றும் வலியுறுத்தினேன்.

அம்மாவின் வழியில் ,இவ்விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று முதல்வர் கூறியதுடன், அதிமுக MPக்கள் நாடாளுமன்றத்தில் அவ்வாறே குரல் கொடுப்பார்கள் என்றார்.

அதை நிருபிக்கும் வகையில் அண்ணன் அன்வர் ராஜா MP அவர்கள் , சமரசமின்றி, மிக சிறப்பாக பேசினார்.

முன்பு நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் உரிமை குரலை முழங்கினார். பிறகு அவரது மாணவர்களான முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலாவும், இந்திய தேசிய லீக்கின் நிறுவனர் இப்ராகிம் சுலைமான் சேட் சாஹிபும் முழங்கினார்கள்.

ஷாபானு வழக்கு நடந்த போது பனாத்வாலா ஆற்றிய உரை வரலாற்று ஆவணமாகும்.

அது போல் முத்தலாக் மசோதா குறித்து அண்ணன் அன்வர் ராஜா அவர்கள், ஆற்றிய உரையும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும். ஒரு சமுதாய கட்சியின் சார்பில் பேசுவது என்பது வேறு. ஆனால் ஒரு பொதுவான கட்சியின் சார்பில் வெற்றிப் பெற்ற ஒருவர் பேசுவது என்பது வேறு. அவரை இவ்வாறு பேச அனுமதித்த முதல்வர் எடப்பாடியாருக்கும், அதிமுக தலைமைக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பல கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் இவ்விவாதத்தில் பேசியிருந்தாலும், இவரது உரையே தனித்துவமிக்கதாக இருக்கிறது.

இத்தருணத்தில் மற்றொரு விஷயத்திற்காகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்திலிருந்து மெக்கா செல்லும் ஹாஜிகளுக்கு, தமிழக அரசு வருடந்தோறும் 6 கோடி ரூபாய் மானியம் அளித்ததற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீரிலும், அதிகமாக வாழும் அஸ்ஸாம், மே.வங்கம் போன்ற மாநிலங்களில் கூட இப்படி கொடுக்கவில்லை.

இந்தருணத்தில் இங்கு கூடியுள்ள அனைவரின் சார்பிலும் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறோம்.

ஐயா, #MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என சட்டசபையில் நானும், தனியரசும், கருணாசும் கேட்டோம்,. இதில் மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அண்ணன் #ஸ்டாலின் அவர்களும் உடன்பட்டு கேட்டார். அபுபக்கர் MLA வும் கேட்டார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன் விடுதலை ஆகியுள்ளனர். ஆனால் சமூக வழக்குகளில் கைதான முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை ஆகவில்லை.

அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போது, சபையில் வழிமறித்து இக்கோரிக்கையை நேரில் கொடுத்தேன். உங்களுக்காக பரிசீலிக்கிறேன் என்று கூறி, அது குறித்து உடனே நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொடுத்தார். இன்று அவர் இல்லை. ஆனால் அவர் உயிரைக் கொடுத்து உருவாக்கிய அவரது அரசு இருக்கிறது.

இங்கு உளவுத் துறை அதிகாரிகளும் வந்துள்ளனர். நீங்கள் இது குறித்து நல்ல அறிக்கையை கொடுத்தால், ஆட்சியாளர்கள் எளிதில் முடிவெடுப்பார்கள்.

இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி .எங்களின் தாய் சபையான #ஜமாத்துல்_உலமா-வின் தலைவர் சங்கைக்குரிய மவ்லவி. ஹாஜாமெய்தீன் ஹஜ்ரத் வந்திருக்கிறார். எனது நண்பர்கள் #அபுபக்கர்_MLA, #தெஹ்லான்_பாகவி போன்றோரும் வந்துள்ளனர். எல்லோரின் சார்பிலும் இக்கோரிக்கையை வைக்கிறேன். சிறைவாசிகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தை பாய்ச்சுங்கள். தண்டனை காலத்தை விட அதிகமான தண்டணையை அவர்கள் அனுபவித்து விட்டார்கள்.

நானும், தனியரசு போன்றோரும் விடுத்த வேண்டுகோளை ஏற்று,பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டீர்கள். அதற்காகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் இக்கோரிக்கையையும் நிறைவேற்றி தாருங்கள்.

முஸ்லிம் சமூகம் அமைதியையும், நட்புறவையும் விரும்புகிறது. பயங்கரவாதத்தை, மதவெறியை, வன்முறையை வெறுக்கிறது.

நம் மண்ணில் வகுப்பு வாதத்தை அனுமதிக்க கூடாது. பெரியாரும், அண்ணாவும் போற்றிய பூமி இது.

தனது நண்பர் #BSA ரஹ்மானை போற்றும் விதத்தில் “மே ரா நாம் அப்துல் ரஹ்மான்” என படத்தில் பாட்டெழுத சொன்னவர் MGR . மோடியா ? லேடியா? என கேட்டவர் ஜெயலலிதா அம்மா அவர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றுள்ள மக்களவை துணை சபாநாயகர் அண்ணன் தம்பிதுரை அவர்கள் ஒரு திராவிட இயக்க பற்றாளர். #ஃபாசிச எதிர்ப்பாளர்.

மக்களவையில் சமரசமின்றி பேசிய அண்ணன் அன்வர் ராஜா அவர்களுக்கும், அவரை சபையில் பேச அனுமதித்த துணை சபாநாயகர் அண்ணன் தம்பிதுரை அவர்களுக்கும், முத்தலாக் மசோதா குறித்த இந்த நிலைபாட்டை எடுத்த முதல்வர் எடப்பாடியார் மற்றும் அதிமுக தலைவர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், உதயக்குமார், நிலோபர் கபில், ஜமாத்துல் உலமா தலைவர் ஹாஜா மொய்தீன் ஹஜ்ரத், முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் அபுபக்கர் MLA, SDPI தேசிய துணைத் தலைவர் டெஹ்லான் பாகவி, ஜமாத் இ இஸ்லாமி யை சேர்ந்த டாக்டர் Kvs.ஹபீப் முகம்மது., கூட்டமைப்பை சேர்ந்த அப்பல்லோ.ஹனீபா, INTJ துணைத் தலைவர் முனீர், வெல்வேர் பார்ட்டி தமிழக தலைவர் சிக்கந்தர், பாத்திமா முஸப்பர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ரபி பெர்னாட் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆண்கள், பெண்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்