(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி #ஜாக்டோ_ஜியோ அமைப்பை சேர்ந்த #அரசு_ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வருவது தமிழக மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை பேசி தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினரும் சுமுகமான முறையில் இப்பிரச்சனையை எதிர்க்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அரசு ஊழியர்களின் முற்றுகை போராட்டத்தை ஒடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், கைது செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைத்து அரசு ஊழியர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 08/05/2018.
Month:
அபுதாபி மண்டல MKP செயற்குழு கூட்டம்..!
அமீரகம்.மே.07., கடந்த வெள்ளிக்கிழமை (04-05-2018) அன்று அபுதாபி மண்டல மஜகவின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் ஹாஜி. S.A.முஹம்மது தையூப் தலைமையில் மாலை 6 அளவில் நடைபெற்றது. இதில் அபுதாபி மண்டல நிர்வாகிகள் மற்றும் பனியாஸ், அபுதாபி சிட்டி, முஸாப்பாஹ் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் அமீரக துணை செயலாளர் அடியற்கை. லியாகத் அலி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். சிறப்பாக நடைப்பெற்ற இச்செயற்க்குழு கூட்டத்தில் கீழ் காணும் விசயங்கள் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. 1. புனித ரமலான் மாதத்தில் அமீரகம் வருகை தரும் மஜக பொதுச்செயலாளரம் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, அபுதாபியில் பிரம்மாண்ட இப்தார் நிகழ்ச்சி நடத்துவது. 2. மண்டல செயலாளர் ஹாஜி. S.A. முஹம்மது தையூப் தலைமையில் அடியற்கை. தமீமுன் அன்சாரி, கொல்லாபுரம் யாசிர், நரசிங்க பேட்டை பக்கீர் முஹம்மது, லால்பேட்டை பதஹூல்லாஹ் உள்ளிட்டோர் அடங்கிய இப்தார் குழு அமைப்பது. 3. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி பொதுச்செயலாளர் முன்னிலையில் கட்சியில் இணைப்பது. 4. ஒவ்வொரு மாதமும் கிளை வாரியாக கூட்டங்கள் நடத்துவது. 5. இப்தார் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த தொண்டர் அணியை அமைப்பது. இறுதியில்
குடியாத்ததில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!
வேலூர்.மே.07., வேலூர் மேற்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் குடியாத்தம், MBS நகரில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் சலீம், கிளை செயலாளர் அல்தாப், கிளை துணை செயலாளர் சாதிக், கிளை மருத்துவ அணி செயலாளர் ரஹ்மான், மற்றும் பிலால், அல்த்து, ஆகியோர் கலந்து கொண்டனார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #குடியாத்தம்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 06.05.2018
“நீட் தியாகி” கிருஷ்னசாமி உடலுக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA நேரில் மரியாதை!
திருவாரூர்.மே.07., நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்று, மாராடைப்பால் உயிரிழந்த கிருஷ்னசாமி அவர்களின் உடல், அரசு உதவியுடன் விளக்குடி கிராமத்திற்கு நள்ளிரவில் கொண்டுவரப்பட்டது. கோவைக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையில், இன்று காலை #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் "நீட் தியாகி" கிருஷ்னசாமி உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் உடனிருந்தார். பொதுச்செயலாளரிடம் கிராம மக்கள் அவர் எடுத்த முன்முயற்ச்சிகளுக்கு நன்றியை கூறினர். அவரது இறுதி சடங்கு நாளை செவ்வாய்கிழமை காலை நடைப்பெற இருக்கிறது. இதில் பல்வேறு தலைவர்களும், நீட் எதிர்ப்பு போராளிகளும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தி திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தகவல்; #MJK_IT_WING, #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #மஜக_திருவாரூர்_மாவட்டம்.
வேலூரில் தொடரும் மஜகவின் மனிதநேய பணிகள்..! தன்னெழுச்சியாக இணையும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்..!!
வேலூர்.மே.06., வேலூர் மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் ஆனைக்கட்டு தொகுதி சேக்கனுர் ஒன்றியத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் தலைமையில், அப்சல் பாஷா முன்னிலையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் குஸ்ரு கவுஸ் மொஹித்தீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலளார் சையத் காதர், 3ம் மண்டல பொருளாளர் ஷேக் இம்ரான், முஜாயத், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 06.05.2018