டிச.28., காயல்பட்டினம் மனிதநேய ஜனநாயககட்சியின் சார்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையரை சந்தித்து காயல்பட்டினத்தில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது இந்நிகழ்வில் நகரசெயலாளர் ஜிப்ரி தலைமையில், நகர பொருளாளர் மீரான், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் முகம்மது நஜிப்,நகர து.செயலாளர் ஜியாவுதீன்,நகர இளைஞரணி துணை செயளாலர் ஜரித் நகர மாணவர் இந்தியா து.செயலாளர் முகம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர் இச்சந்திப்பில் நகராட்சி ஆணையர் அவர்களிடம் ஏற்கனவே சட்ட சபையில் சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையில் நமது பொதுசெயலாளர் M.தமிமுல்அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக பேசியதையும் மேலும் உயர் நீதிமன்றம் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரி நீதிமன்றம் தீர்ப்பு வந்திருப்பதை பற்றியும் விரிவாக எடுத்து கூறப்பட்டது நகராட்சி ஆணையர் அவர்களும் இது கூறித்து விரைந்து உறிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் எல்லா புகழும் இறைவனுக்கே இறுதி வெற்றி நமது அணிக்கே தகவல்: மகக ஊடகபிரிவு, காயல் நகரம்
Month:
திட்டச்சேரி ரேஷன் கடையில் நாகை MLA திடீர் ஆய்வு…
டிச.28., நாகை தொகுதிக்கு உட்பட திட்டச்சேரி பேரூராட்சியில் ரேஷன் கடைக்கு சென்று #தமிமுன்_அன்சாரி_MLA திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு நின்றிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ரேஷன் கடையில் கையிருப்பு பொருட்கள் விபரங்களை கேட்டறிந்தார்.அங்குள்ள மக்கள் உளுந்து பற்றாக்குறை இருப்பதாக கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக MLA கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 28_12_16
கொடைக்கானலில் மஜக கிளை தொடக்கம்…
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் கொடைக்கானலில் இன்று 26-12-2016 திங்கள்கிழமை மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பழனி C.A.சாந்துமுஹம்மது தலைமையில் மாவட்ட துனை செயலாளர் A.ஷாஜஹான் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கொடைக்கானல் நகர நிர்வாகிகள் பட்டியல் மஜகதலைமைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 1) நகரச்செயலாளர் G.முஹம்மது ரஜாக் 2)i .ஆசிக் நகர பொருளாளர் 3) Y.ஷேக் தாவூது நகர துனை செயலாளர் 4) K.ஜாபர் சேட் நகர துனை செயலாளர் 5) P.மீரான் மைதீன் ஒன்றிய செயலாளர் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் அன்புடன் பழனி C.A.சாந்துமுஹம்மது மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்த மஜக மாநில பொருளாலர் S.s.ஹாருன் ரஷித்
வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்த மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொருளாலர் S.s.ஹாருன் ரஷித். M.com அவர்கள். இரண்டாவது நாளாக பொது மக்கள் சந்திப்பு அங்குள்ள கோவில் வழியாக சென்ற அண்ணன் அவர்களை கோவில் நிர்வாகிகள். பாசமுடன் கோவிலுக்குல் அழைத்து சென்று பாசத்துடன் நட்புகளை பறிமாரிக்கொண்டனர். அனைத்து மக்களிடமும். எளிமையாக பழக கூடிய மனிதர் என்று மக்களிடம் பாராட்டுக்களை பெற்றார்கள். இந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது உடண் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். ஜாபர், நூருல்லா. அமின், மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் மற்றும் அபுதாஹிர். அன்வர் கலந்து கொண்டனர் தகவல் : மஜக ஊடகபிரிவு வேலூர் கிழக்கு மாவட்டம்
குவைத்தில் பேரழுச்சியை தந்த மஜக! சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றி
வளைகுடாவின் எண்ணை கிண்ணமாக திகழும் குவைத்தில் மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் கடந்த (23/12/2016) நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒருமாத காலமாக மனிதநேய சொந்தங்கள் குவைத் முழுவதும் தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்கள். ஃபர்வானியா, ஹவல்லி, கைத்தான், முர்காப், ஃபாஹில், பயான், கைஃபான், ஜெலிப், மஹபுல்லா, மங்காப், சால்வா, சுலைபிஹாத், குர்த்துபா, சுவைக், ஜாப்ரியா, ரிக்கை, ஒமேரியா, ஹசாவி, ரிஹாப், சல்மியா, உள்ளிட்ட கிளைகள் தீவிரமாக தமிழக - புதுச்சேரி மக்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். கடும் குளிர் வாட்டிய நிலையிலும் மாலை 6 மணிக்கு எல்லாம் அரங்கம் நிறையத் தொடங்கியது. பெண்களும் அரங்கின் ஒரு பகுதியில் திரண்டார்கள். சமூகநீதி மாநாட்டிற்கு மண்டல செயலாளர் முத்துக்காபட்டி.ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை ஏற்க்க மண்டல பொருளாளர் முஹம்மது நபீஸ் அவர்கள் தொகுத்துவழங்கினார், நிகழ்வின் தொடக்கமாக நீதி போதனையை இளம் போராளி சகோ. முகம்மது உசேன் அவர்கள் நிகழ்த்த முறையாக மாநாடு துவங்கியது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் TVS.குழுமம் நிறுவனர் Dr.ஹைதர் அலி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து மாநாட்டிற்க்காக வந்திருந்த ஹலால் இந்தியா